tg travels

விஷேடே தினங்களில் அதிகமான விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதை தவிர்க்க காத்தான்குடி பொலிஸார் அதிரடி நடவடிக்கை...!


(S.சஜீத்)
இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு இன்று (02)  ஹஜ்ஜுப் பெருநாள் விஷேட தினமாகும்  இன்றைய தினத்தில் அதிகமான இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் தலைகவசம் அணியாமல் ஒரே தடவையில் இரண்டுக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது மற்றும் அதிவேகமாக பயணிப்பது போன்ற ஆபத்தான சட்டத்திற்கு முரணான விடயங்களில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக வேண்டி காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் இன்று காலை முதல் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு தலைக்கவசம் அணியாத நபர்கள் மற்றும் சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் செலுத்துவதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் பொலிஸாரின் இந்த செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தலைக்கவசம் அணிந்தவாரு மோட்டார் சைக்கிள்களை செலுத்தினர்.

மேலும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கூறிப்பிடும் போது விஷேட தினங்களில் அதிகமான விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதனை யாவரும் அறிந்திருப்போம். இதற்கு காரணம் சிறுவர்கள் பெரிய மோட்டார் சைக்களில்களை தலைக்கவசம் இன்றி செலுத்துவதும், அதிவேகமாக செலுத்துவதனாலும் தான் இப்படியான அசம்பாவிதங்கள் இடம் பெறுகின்றன. எனவே மக்களின் நலன் கருதிதான் நாங்கள் இப்படியான அதிரடி நடவடிக்ககையில் இன்றைய தினம் ஈடுபட்டு தலைக்கவசம் இன்றி மோட்டார்சைக்கிள் செலுத்துவோரையும் சிறு வீதிகளில் அதிவேகமாக பயணிப்பவர்களையும் பிடித்து சட்டநடவடிக்களைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்று குறிப்பிடார்
விஷேடே தினங்களில் அதிகமான விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதை தவிர்க்க காத்தான்குடி பொலிஸார் அதிரடி நடவடிக்கை...! விஷேடே தினங்களில் அதிகமான விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதை தவிர்க்க காத்தான்குடி பொலிஸார் அதிரடி நடவடிக்கை...! Reviewed by Madawala News on 9/02/2017 04:51:00 PM Rating: 5