tg travels

பன்றி இறைச்சி சாப்பிட்ட பாடசாலை மாணவி உயிரிழப்பு.


இரவு உணவுடன் பன்றி இறைச்சியைச் சாப்பிட்ட 17 வயது மாணவி ஒருவர்  உயிரிழந்துள்ளார். பன்றி இறைச்சியை  உட்கொண்ட இம்மாணவிக்கு அன்றிரவே வயிற்றுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார்.

தொம்பே பகுதியைச் சேர்ந்த பட்டதுவகே அஞ்சலி நிமாஷா பெரேரா என்ற மாணவியே இவ்வாறு மரணமானார்.

இவர் குடும்பத்தின் மூன்றாவது பிள்ளையாவர் .  காய்ச்சலுடன் வயிற்று வலியும் ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்ட இந்த மாணவி பின்னர் தொம்பே கம்பஹா, கொழும்பு
தேசிய ஆஸ்பத்திரிகளுக்கு மாற் றப்பட்டதாக மரண விசாரணை அதிகாரியிடம் தந்தையார் தெரிவித் தார்.


பிரேத பரிசோதகர் அறிக்கை படி பகிரங்க தீர்ப்பு வழங்க கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி டி. எச். எம்.சேனநாயக்கா நடவடிக்கை எடுத்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கையை எதிர்வரும் (27) நீதிமன்றில சமர்ப் பிக்குமாறு கொழும்பு நகர திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர உத்தரவிட்டார்.

பன்றி இறைச்சி சாப்பிட்ட பாடசாலை மாணவி உயிரிழப்பு.  பன்றி இறைச்சி சாப்பிட்ட பாடசாலை மாணவி உயிரிழப்பு. Reviewed by Madawala News on 9/14/2017 09:29:00 AM Rating: 5