Kidny

Kidny

வைத்தியசாலையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்ட ரசீனா என்ற பெண்ணின் உயிரிழப்பு.. ! மரணத்துக்கான காரணம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.


அப்புத்தளையில்  மாவட்ட அரசினர் மருத்துவமனையில் பெரும் பிரச்சினைக்குள்ளான பெண்ணின் மரணம், அவரது மூளைப் பகுதியின் நரம்பொன்று வெடித்ததனாலேயே ஏற்பட்டதென்று, சட்ட வைத்திய பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.

இதனை பதுளைஅரசினர் மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரி சந்தகேன்வடுகே உறுதிப்படுத்தி உள்ளார்.

மேற்படி மரணம் குறித்த, சட்ட வைத்திய பரிசோதனை அறிக்கையில் உத்தியோகபூர் வமாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வைத்திய அறிக்கை தேற்று முன்தினம் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

அப்புத்தளை பகுதியின் மாகிரிபுர சான்ற இடத்தில் வசித்து வந்த  காதர் ரசீனா என்ற 43 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே, மரணமானவராவார்.

இவர் கடுமையான தலைவலி காரணமாக கடந்த 13ஆம் திகதி, அப்புத்தளை மாவட்ட அரசினர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார்.

அவ்வேளையில் கடமையிலிருந்த பெண் டாக்டர் அனுமதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

 அதன்பின்னர் அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அவர் இறக்கவில்லை. அவருக்கு உயிர் இருக்கின்றதென்று டாக்டரிடம்
தெரிவித்ததுடன்,  டாக்டர் பொறுப்பற்ற முறையில் நடக்கின்றாரென்று கூறினர். இதனை அடுத்து அங்கு  பதற்றமான சூழல் உருவானது.


இதையடுத்து, அப்பெண் மருத்துவமனைக்குள் கொண்டு செல்லப்பட்டு, சேலைன் ஏற்றப்பட்டது. அத்துடன்அவரின் உயிர் பிரித்துவிட்டதென்று கூறி அவரது குடும்பத்தினர், அப்புத்தளை பொலில் நிலையத்தில் புகார் செய்தனர்.

 அதைத்தொடர்ந்து அம்மருத்துவமனையில் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

உடனடியாக பொலிஸார் அங்கு வரவழைக்கப்பட்டு அமைதி ஏற்படுத்தப்பட்டது.


இதன்பின்னர், பண்டாரவளை பதில் மஜிஸ்திரேட் நீதிபதி ருவன் பஸ்நாயக்க இம் மரணம் குறித்து ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டு, சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக் குற்படுத்தும்படி அப்புத்தளைப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.


அந்த உத்தரவின் பேரில் ஜனாஸா  பதுளை சட்ட வைத்திய பிரிவிற்கு அனுப்பப்பட்டது.

அங்கு இடம்பெற்ற சட்ட வைத்திய பரிசோதனையின் போது,

இறந்த பெண்னின் மூளைப் பகுதி நரம்பொன்று வெடித் ததனாலேயே, இம்மரணம் சம்பவித்துள்ள தென்று தெரியவந்துள்ளதுடன்,  வைத்திய அறிக்கையும் உத்தியோகபூர்வமாக  வெளியிடப்பட்டது.

வைத்தியசாலையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்ட ரசீனா என்ற பெண்ணின் உயிரிழப்பு.. ! மரணத்துக்கான காரணம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. வைத்தியசாலையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்ட ரசீனா என்ற பெண்ணின் உயிரிழப்பு.. ! மரணத்துக்கான காரணம்  உத்தியோகபூர்வமாக  வெளியிடப்பட்டது. Reviewed by Madawala News on 9/18/2017 02:58:00 PM Rating: 5