Kidny

Kidny

8 பள்ளிவாசல்களை அபிவிருத்தி செய்வதற்காக நிதி ஒதுக்கினார் அமைச்சர் மத்தும பண்டார.


- கஹட்டோவிட்ட ரிஹ்மி -

எங்களது நாடு 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தை வெற்றி கொண்டாலும், யுத்தத்தின் பின்னர்
வெற்றி கொள்ள வேண்டிய மக்களை வெற்றி கொள்வதற்கான வேலைத்திட்டத்தில் வெற்றி பெறவில்லை.

 இதனால் இன்னும் மக்கள் மத்தியில் சரியான நல்லிணக்கம், சகவாழ்வு ஏற்படவில்லை. எமது அரசு ஆட்சிக்கு வந்ததே நல்லிணக்கத்துடன் கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்கை வெற்றி கொள்வதற்காகும். அதில் மிகவும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒன்றாக ஆன்மீக கட்டமைப்பைக் கூறலாம்.

எனினும் எமக்குக் தெரியும், சென்ற காலங்களில் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த இந்த ஆன்மீக நிலையங்களில் பெரிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இது போன்றவைகள் ஏற்படுத்தப்படுவது அரசியல் ரீதியிலான தேவைகளை அடைவதற்கே என்று நான் நினைக்கிறேன். சில சந்தர்ப்பங்களில் இவ்வாறே அதனை வளரவிட்டிருந்தால், தீவிரவாத போராட்டத்திற்கு அப்பால் அடிப்படைவா, மதவாத பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும். அப்படியொரு சூழ்நிலையிலே நாட்டு மக்கள் முடிவெடுத்தார்கள் ஆட்சி மாற்றம் ஒன்றிற்காக.


நாங்கள் அரசு என்றவகையில், ஆட்சிக்கு வந்ததிலிருந்து மதரீதியான சகவாழ்வை ஏற்படுத்துவதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறோம். அதற்கான சகல படிமுறைகளையும் நாங்கள் தற்போது முன்னெடுத்து வருகிறோம்" என்று அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

மொனறாகலை மாவட்டத்தில் ஆன்மீக தளங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வு சென்ற 11 ஆம் திகதி இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிலையத்தில் (SLIDA) நடைபெற்றது.

அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், "நாம் எதிர்காலத்திற்காக நிலையான பயணம் ஒன்றிற்கு அத்திவாரம் அமைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையான நாட்டினை கட்டியெழுப்பும் போது இனங்களுக்கிடையிலான நம்பிக்கை , ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடப்பது இவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.


 இங்கு ஆன்மீக நிலையங்கள் நல்வாழ்வுக்காக பாரிய வேலைத்திட்டங்களை எமது அரசு நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. இன்றைய தினம் மொனறாகலை மாவட்டத்திற்கான ஆன்மீக நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிப்பது இங்கு சொன்ன சகவாழ்வுக்கான அரசாங்கமாகும்.


எங்களது மாவட்டத்திலுள்ள ஆன்மீக நிலையங்களில் உரியதைத் தெரிவு செய்து அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான பாரிய முயற்சியை எடுக்கவுள்ளோம். இந்த வேலைத்திட்டத்தில் 38 விகாரைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், அதற்கு சமாந்தரமாக 10 கோவில்களும், 8 முஸ்லிம் வணக்கஸ்தளங்களும் அபிவிருத்தி செய்வதற்காக நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

இதற்காக ரூபா 200 இலட்சம் ஒதுக்கவுள்ளோம். இதனை செலவளிப்பதன் மூலம் ஆன்மீக நிலையங்கள் அபிவிருத்தியடைவது போல மக்களது உள்ளங்களும் ஆத்மீகத்தால் வளர்ச்சியடைய வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.


ஒருவருக்கொருவர் புரிந்துணர்வை வளர்ப்பதன் மூலம் மக்களுக்கிடையில் சகோதரத்துவத்தை மிக இலகுவாக ஏற்படுத்தலாம். தற்போது எங்களுக்கு வெற்றி கொள்வதற்கு முடியாமல் போன மக்களது உள்ளங்களை வெல்வதற்கு இலேசாகிறது. விசேடமாக மொனறாகலை போன்ற வெவ்வேறு மொழிகள் பேசும், வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும் மாவட்டமொன்றில் இச்செயற்றிட்டத்தை ஆரம்பிப்பதன் மூலம் பாரிய பலன் கிடைக்கும் என்பதைக் கண்டு கொள்ள முடியும்" என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, மொனறாகலை மாவட்டச் செயலாளர் டீ.எஸ்.பத்மகுலசூரிய மற்றும் மொனறாகலை மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களினதும் செயலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
8 பள்ளிவாசல்களை அபிவிருத்தி செய்வதற்காக நிதி ஒதுக்கினார் அமைச்சர் மத்தும பண்டார. 8 பள்ளிவாசல்களை அபிவிருத்தி செய்வதற்காக நிதி ஒதுக்கினார் அமைச்சர் மத்தும பண்டார. Reviewed by Madawala News on 9/12/2017 03:07:00 PM Rating: 5