tg travels

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் நான்கு உணவகங்கள் சீல் வைக்கப்பட்டன. இஸ்ஸதீன் தலைமையில் அதிரடி.


அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் நுகர்வுக்கு பொருத்தமில்லாமலும், உணவுச் சுகாதாரம் பேணப்பாடாமலும், கழிவுகளை ஒழுங்கான முறையிலும் அகற்றப்படாமலும், வியாபார அனுமதிப் பத்திரம், வைத்திய சான்றிதழ் பெறப்படாமலும் காணப்பட்ட நான்கு உணவகங்கள் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ளாதாக, பொத்தவில் பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மலீக், இன்று (09) தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச சுகாதார அதிகாரி டொக்டர் ஏ.எம். இஸ்ஸதீன் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று (09) உணவகங்கள், உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் போன்றவற்றில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது நுகர்வுக்கு பொருத்தமில்லாமலும், உணவுச் சுகாதாரம் பேணப்பாடாமலும், கழிவுகளை ஒழுங்கான முறையிலும் அகற்றப்படாலும் காணப்பட்ட 03 உணவகங்களும், 01 நுகர்வுப் பொருட்கள் விற்பனை நிலையமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மூடப்பட்டுள்ள உணவகங்கள், மேற்படி குறைபாடுகளை சீர்செய்தப் பின்னரே மீளத் திறப்பதற்கு அனுமதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் நான்கு உணவகங்கள் சீல் வைக்கப்பட்டன. இஸ்ஸதீன் தலைமையில் அதிரடி. அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில்  நான்கு உணவகங்கள் சீல் வைக்கப்பட்டன. இஸ்ஸதீன் தலைமையில் அதிரடி. Reviewed by Madawala News on 9/09/2017 04:46:00 PM Rating: 5