Kidny

Kidny

ரோஹிங்யா - இது அழிக்கப்படும் சாம்ராஜ்ஜியம்! rhn

குற்றுயிரும் குறையுயிருமாய் கிடக்கும் ஒரு சமூகத்தின் தொடர்கதை!
கண்ணீருக்கு பஞ்சமில்லா ஒரு கறுப்பு வாழ்க்கை!

சீறிப்பாயும் இரத்தமும்
முட்டிமிதிக்கும் யுத்தமும் தான் அடையாளமாகிப்போன ஒரு சமூதாயம்!

ரோஹிங்யா-  கடைந்தெடுக்கப்பட்ட இனவாதம் கலக்குமிடம்!

உலகமே பார்த்திருக்க அரங்கேறும் ஒரு துரோக நாடகம்!

வெட்டியும் வீசியும்
கொன்றும் குவித்தும் நிர்மூலமாக்கப்படும் மனிதாபிமானம்!

ஒன்றல்ல இரண்டல்ல இலட்சோப இலட்சம் உயிர்களை கொன்றுகுவித்தும் நாதியற்றுக்கிடக்கும் மனிதம்!

அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு துரத்தியடிக்கும் கூறுகெட்ட இனவாதம்!

குருதிகளால் வரையப்படும் காட்சிகளுக்கு பௌத்த நிறச்சாயம் பூசும் 'விராது'!

கொலை செய்யப்பட்ட தாயின் வயிற்றைக்கிழித்து வெளியில் சிசுவை எடுக்கின்ற மனிதக்கொடூரம்!

அப்பட்டமாய் ஒரு சமூகும் கருவருக்கப்படுகிறது!

உலகமே பார்த்திருக்க நடந்து கொண்டிருக்கும் ஓரங்க நாடகமிது!

ரணங்களாகிப் போகும் மனங்கள்!
உடல்கள் பிணங்களாகிப் போகும் கணங்கள்!

உலக வரைபடத்திலிருந்து ஒரு சமூகத்தை ஓரிரவுக்குள் மறைக்கும் கபடநாடகம்!

துப்பாக்கி ரவைகளுக்குள்ளே 
தூர்ந்து போகும் உயிர்கள்!

கரைபுரண்டோடும் கண்ணீரில்
இரைதேடி கொல்லும் காட்டுமிரான்டிகள்!

கலிமா சொன்ன முஸ்லிம்கள் என்பதற்காக கருவருக்கப்படும் ஒரு சாம்ராஜ்ஜியம்!

கொட்டி தீர்க்கும் வேட்டுக்களை
கை கட்டி நின்று பார்க்கும் ஐ.நா.!

சிதறிய ஈசல்களாய் சிசுக்கள் கிடக்க,
பதறிய நெஞ்சமாய் பெற்ற தாய் துடிக்க,
கள்ள மௌனம் காக்கும் மேற்குலகம்!

விற்றுப்பிழைத்து வியாபாரம் நடத்தி,
குள்ள நரிக் கும்பல்களோடு கூட்டு நடத்தும் அராபிய குதிரைகள்!

எதிர்த்து போராடத்தான் எங்களால் முடியவில்லை!
எழுந்து கேட்கவுமா முடியாது!

யா அல்லாஹ்! உன்னிடம் இரு கரம் ஏந்துகிறோம்!
எம் உம்மத்தை காத்துவிடு!
அமைதியை தந்துவிடு!
அழியும் ரோஹிங்யாவை  காத்துவிடு!
சதிகாரக் கும்பல்களின் இதிகாச நாடகங்களை பொடியாக்கிவிடு!
எமது மீட்சி உன்னிடமே! எம் சமூகத்தை காத்துவிடு யா அல்லாஹ்!

-சல்மான் லாபீர்-
பொத்துவில்.
ரோஹிங்யா - இது அழிக்கப்படும் சாம்ராஜ்ஜியம்! rhn ரோஹிங்யா -  இது அழிக்கப்படும் சாம்ராஜ்ஜியம்! rhn Reviewed by Madawala News on 9/01/2017 02:11:00 PM Rating: 5