Kidny

Kidny

கம்பளை - கண்டி வீதி தளபாட கடையில் இடம்பெற்ற சூட்சும களவு. இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்.


கம்பளை - கண்டி வீதியில் அமைந்துள்ள மர தளபாடங்கள் விற்பனை நிலையத்தில் நபரொருவர் பொருட்கள் கொள்வனவு செய்யவந்தவர் போல் நடித்து லாச்சில் இருந்த இருபதாயிரம் ரூபா பணத்தினை திருடுவது அங்கிருந்த கண்காணிப்பு கெமராவில் தெளிவாக பதிவாகியுள் ளது.

இதனடிப்படையில் கடை உரிமையாளரினால்  பொலிஸ் நிலையத்தில் முறைப் பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவதினம் சந்தேக நபர் கட்டில்கள் கொள்வனவு செய்யவந்தவர் போல் பாசாங்கு காட்டி அங்கிருந்த ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பியுள் ளதுடன் பணம் வைத்திருக்கும் மேசை அருகில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த கட்டில்களை பார்வையிடுவது போல் நடித்து அங்கிருந்த இரு பதாயிரம் ரூபாவினை திருடிச் சென்றுள்ளார்.

குறித்த நபர் சென்று அரை மணித்தியாலத்தின் பின்னரே பணம் திருட்டு போன விடயம் தெரிய வந்ததையடுத்து அங்கி ருந்த கண்காணிப்பு கெமராவை பரிசோதனை செய்துபார்த்ததில் சந்தேக நபரே பணத்தை திருடுவது அதில் பதிவாகியிருந் துள்ளது.

குறித்த சந்தேக நபரை அடையாளம் காண்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கு மாறு கேட்கப்படுகின்றனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கம்பளை - கண்டி வீதி தளபாட கடையில் இடம்பெற்ற சூட்சும களவு. இவரை கண்டால் உடன் அறிவிக்கவும். கம்பளை - கண்டி வீதி தளபாட கடையில் இடம்பெற்ற சூட்சும களவு. இவரை கண்டால் உடன் அறிவிக்கவும். Reviewed by Madawala News on 9/13/2017 01:48:00 PM Rating: 5