Kidny

Kidny

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரூகாந்த குணதிலக்க களத்தில்.. ( கிரிக்கட் வீரர் மகிந்த கட்சியில்)


எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் பிரபலமான நபர்களை களமிறக்க பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சப்ரகமுவ மாகாணசபைக்கான தேர்தலில் பிரபல சிங்களப் பாடகர் ரூகாந்த குணதிலக்க கேகாலை மாவட்டத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி இவரை தன் வேட்பாளர் பட்டியலில் உள்வாங்குவதற்கான பேச்சுவார்தையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

முன்னை நாள் ஐ.தே.க தீவிர ஆதரவாளரான இவர் சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார்.

அதன்பின் நாட்டை விட்டு வௌியேறி அமெரிக்காவில் வசித்த ரூகாந்த - சந்திரலேகா தம்பதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காலத்தில் நாடு திரும்பி அவருக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் ரூகாந்த மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சிக்குத் திரும்பியுள்ளதுடன் மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிடவுள்ளார்.

மேலும், பல பிரபலங்கள் இவருடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளனர்.

இதற்கிடையே மஹிந்த ஆதரவு அணியான பொதுஜன பெரமுண அணியினரும் முன்னாள் கிரிக்கட் வீரர் தரங்க பரணவித்தாரனவை சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் களமிறக்கவுள்ளனர்.

சுதந்திரக்கட்சியின் மைத்திரி அணி சார்பில் போட்டியிட இதுவரை எந்தவொரு பிரபலமும் முன்வரவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரூகாந்த குணதிலக்க களத்தில்.. ( கிரிக்கட் வீரர் மகிந்த கட்சியில்) எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரூகாந்த குணதிலக்க களத்தில்.. ( கிரிக்கட் வீரர் மகிந்த கட்சியில்) Reviewed by Madawala News on 9/19/2017 10:38:00 AM Rating: 5