Kidny

Kidny

மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய மாணவன் வை.எம்.சைபுதீன் பொறியியல் பீடத்தில் பாடசாலையின் வரலாற்றில் சாதனை.





(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்தில் கடந்த வருடம் உயர்தரப்பரீட்சை எழுதிய வை.எம்.சைபுதீன் எனும் மாணவன் பாடசாலையின் வரலாற்றில் முதன்முறையாக பொறியியல் பீடத்தில் தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.

பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட மாணவனுக்கு பாடசாலையின் அதிபர் ஏ.எல். அபுல் ஹசன் மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பொறியியல் பீடத்தில் சாதனை படைத்த மாணவன் வை.எம்.சைபுதீன் மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபையின் பொருளாளர் அல் ஹாஜ் எஸ்.எம். யஹியா அவர்களின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய மாணவன் வை.எம்.சைபுதீன் பொறியியல் பீடத்தில் பாடசாலையின் வரலாற்றில் சாதனை. மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய மாணவன் வை.எம்.சைபுதீன் பொறியியல் பீடத்தில்  பாடசாலையின் வரலாற்றில் சாதனை. Reviewed by Madawala News on 9/10/2017 10:01:00 PM Rating: 5