tg travels

பிரித்தானியாவில் SAITM மருத்துவக் கல்லூரிக்கு தடை


மாலபே SAITM தனியார் மருத்துவக் கல்லூரி பிரித்தானிய மருத்துவ சபையின் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 

பிரித்தானிய மருத்துவ சபையினால் ஏற்றுக்கொள்ளப்படாத மருத்துவப் பட்டப்படிப்பு வழங்கும் பல நிறுவனங்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தப் பட்டியலிலேயே SAITM மருத்துவக் கல்லூரியும் உள்வாங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பிரித்தானிய மருத்துவ சபையின் PLAB பரீட்சைக்கு முகங்கொடுக்கவோ, அந்நாட்டு மருத்துவ சபையில் பதிவு செய்யவோ குறித்த பட்டியலில் காணப்படும் நிறுவங்களினால் வழங்கப்படும் பட்டப்படிப்பு ஒரு தகைமையாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

SAITM தனியார் மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பு மேற்கொண்ட மாணவர் ஒருவர் பிரித்தனியாவின் PLAB பரீட்சைக்கு முகங்கொடுக்க விண்ணப்பித்துள்ள அதேவேளை, குறித்த விண்ணப்பத்தை அந்நாட்டு மருத்துவ சபை நிராகரித்துள்ளது. 

இலங்கை மருத்துவ சபை வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானிய மருத்துவ சபை குறித்த விண்ணப்பத்தை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பிரித்தானியாவில் SAITM மருத்துவக் கல்லூரிக்கு தடை  பிரித்தானியாவில் SAITM மருத்துவக் கல்லூரிக்கு தடை Reviewed by Madawala News on 9/14/2017 11:25:00 PM Rating: 5