Kidny

Kidny

நாளைய நமது சந்ததியினர் ரோஹிங்கியர்களை போல, பலஸ்தீனர்களை போல நாடற்றவர்களாக ..


- முஜீப் இப்ராஹீம் -

ரோஹிங்கிய முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை முதலில் பறித்தார்கள்.
பின்னர் அவர்களை நாடற்றவர்களாக்கி துரத்தினார்கள்...
கொன்று குவித்தார்கள், உடமைகளை எரித்தார்கள்!

பலஸ்தீனத்தை சூறையாடினார்கள்...
பிறகு சொந்தநாட்டு மக்களை அங்கேயே அகதிகளாக்கினார்கள்.

அடிப்படை உரிமைகளை பறித்தார்கள், நெருக்குவாரங்கள், கொலைகள், கொள்ளைகள், வன்புணர்வுகள் என அந்த கொடிய வரலாறு நீள்கிறது!

இந்த தேசங்களின் மக்களுக்காக, அவர்களது விடுதலைக்காக நாம் அவ்வப்போது குரல் எழுப்புகிறோம்.

ஆர்ப்பாட்டங்கள் செய்கிறோம்.

அதிலும் துயரம் நமது வெகுஜன எழுச்சி ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்க, பிரதான கோஷப்பதாகையினை தாங்கிச்செல்ல நாம் தேடுவதும் நமது அரசியல்வாதிகளைத்தான்...

ஆர்ப்பாட்ட நிறைவில் பெரும்பாலும் அது பற்றி குரல் உயர்த்தி பேச ஒலிவாங்கிகளை ஒப்படைப்பதும் அவர்களிடந்தான்....

சரி இப்போது ஒரு கேள்வி?

நமது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் போது, அரசியல் உரிமைகள் வறிதாக்கப்படும் போது நாம் என்கிற பொதுஜனம் ஏன் கிளர்ந்தெழுவதில்லை?

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்ட மூலத்தால் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள் மீது ஆணி அறையப்பட்ட போது ஏன் மெளனமாக இருந்தோம்?

இருபதாவது சட்ட திருத்த மூலத்தால் மாகாண சபை தேர்தல்கள் பிற்போடப்பட அரசால் எடுக்கப்படும் எத்தனங்களை ஜனநாயக உரிமை மீறலாக கருதி அதற்கு எதிராக எழுந்து நிற்காமல், ஏன் முடங்கி கிடக்கிறோம்?

இதற்கெல்லாம் தலைமை கொடுக்க நீங்கள் எதிர்பார்க்கும் அரசியல்காரர்கள் வரமாட்டார்கள் என்கிற பயமா?

அவர்கள் வரமாட்டார்கள்.

மியன்மார் எம்பசிக்கு முன்னாள் எவ்வளவு கத்தினாலும் அவன் ஒன்றும் செய்யப்போவதில்லை என்ற தைரியத்தில் நீங்கள் அழைக்காமலே அங்கு ஆஜராவார்கள்!

ரோஹிங்கியா பிரச்சினைக்கு நூறுவீதம் நம்மாளுங்க வாழும் ஊரில் ஆசுவாசமாக ஜும்ஆ தொழுதுவிட்டு பொடிநடையாய் போய் நம்ம பிரதேச செயலாளராக இருக்கிற உதுமாலெப்பையிடமோ, சஹாப்தீனிடமோ கெத்தாக மஹஜர் கொடுத்துவிட உசாராக ஓடிவருவார்கள்!

நாளைய நமது சந்ததியினரை ரோஹிங்கியர்களை போல, பலஸ்தீனர்களை போல நாடற்றவர்களாக ஆக்கவல்ல நமது அடிமடியில் கைவைக்கிற, அடிப்படை உரிமைகளை உருவி எடுக்கிற பிரச்சினைகளை கண்டும் காணாதது போல காலத்தை ஓட்டுகிறோம்.

அவற்றிற்கு எதிராக நாமாக எப்போது எழுந்திருக்க போகிறோம்?
நாளைய நமது சந்ததியினர் ரோஹிங்கியர்களை போல, பலஸ்தீனர்களை போல நாடற்றவர்களாக .. நாளைய நமது சந்ததியினர்  ரோஹிங்கியர்களை போல, பலஸ்தீனர்களை போல நாடற்றவர்களாக .. Reviewed by Madawala News on 9/12/2017 10:59:00 AM Rating: 5