Kidny

Kidny

இரண்டாவது இருதய மாற்று சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக செய்தது கண்டி வைத்தியசாலை மருத்துவ நிபுணர்கள் குழு.


கண்டி வைத்தியசாலையில் நடந்த இரண்டாவது இருதய மாற்று சத்திர சிகிச்சையை விசேட மருத்துவ நிபுணர்கள் குழு வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
( http://www.divaina.com/2017/09/27/news25.html )

கண்டி வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதான சச்சினி செவ்வந்தி என்ற யுவதிக்கே இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புளியத்த பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான நளிந்த பண்டார சகலசூரிய என்ற இளைஞனின் இருதயம், இந்த யுவதிக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இளைஞன் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து கண்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இளைஞனை காப்பாற்ற முடியாது என்பதை அறிந்து கொண்ட உறவினர்கள் அவரது இருதயத்தை வழங்க இணங்கியுள்ளனர்.

இருதயத்தின் இயக்கம் 10 வீதம் என்ற மட்டத்தில் இருந்த அளுத்கமை பிரதேசத்தை சேர்ந்த சச்சினி செவ்வந்திக்கு வழங்கப்பட்ட சிகிச்சை திடீரென நிறுத்தப்பட்டது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் மருத்துவ நிபுணர்கள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் இருதய மாற்று சத்திர சிகிச்சையை ஆரம்பித்துள்ளனர்.

செவ்வந்தியின் மூத்த சகோதரரி இருதய நோய் காரணமாக 5 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், இருதய சத்திர சிகிச்சைக்காக செவ்வந்தி நேற்றைய தினம் இரவு 11 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இன்று அதிகாலை 5 மணியளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததாகவும் அவரது தந்தையான மஹேஷ் குமார தெரிவித்துள்ளார்.

கண்டி வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர்களான அனில் அபேவிக்ரம, ஜகதி பெரேரா, முதித லங்சக்கார ஆகியோர் உட்பட 20 பேர் கொண்ட அணியினர் இந்த சத்திர சிகிச்சையில் பங்கொடுத்துள்ளனர்.

கண்டி வைத்தியசாலையில் கடந்த ஜூலை மாதம் வெற்றிகரமான முதலாவது இருதய மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இருதய மாற்று சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக செய்தது கண்டி வைத்தியசாலை மருத்துவ நிபுணர்கள் குழு. இரண்டாவது இருதய மாற்று சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக செய்தது கண்டி  வைத்தியசாலை மருத்துவ நிபுணர்கள் குழு. Reviewed by Madawala News on 9/27/2017 05:17:00 PM Rating: 5