Yahya

பொதுமக்களுடன் சேர்ந்து சகோதரனை போல் பணியாற்றிய கிண்ணியா சப் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரனை கண்ணீருடன் பிரிந்த ஊர் மக்கள். (படங்கள்)


(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் சமுதாயப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ்பரிசோதகர் இடமாற்றம் சேவைகளை பாராட்டி மக்கள் நன்றி தெரிவிப்பு

கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒரு வருடத்துக்கும் மேலாக சமுதாயப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த உபபொலிஸ் பரிசோதகர்(SI) மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட புரோஜன் பாலச்சந்திரன் நேற்று முன்தினம்(15) கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.

 இவரது காலப்பகுதியில் கிண்ணியாவில் சமுதாயப் பொலிஸ் பிரிவின் இளம்பொறுப்பதிகாரி என்ற வகையில் பல்வேறு சேவைகளை பொதுமக்களுடன் சேர்ந்து பணியாற்றியமையும் பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளார்.கிண் ணியாவின் பல பகுதிகளிலும் கிராமிய மட்டத்திலும் இவரது பணிகள் கிடைக்கப்பெற்றமையையிட்டு கிண்ணியா மக்கள் இவருக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

பொலிஸ் நடமாடும் சேவையின் நிமித்தம் கிண்ணியா நடுஊற்று,ஆலங்கேணி போன்றவற்றில் பொதுமக்களுக்கான ஒருமாதகால நடமாடும் சேவை,பொலிஸ் சேவையின் 150ஆவது ஆண்டினை முன்னிட்டு வீதியமைத்தல்,சிரமதானம்,பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு, டெங்கு நோய் காலப்பகுதியில் டெங்கு சிரமதானம்,

மருத்துவமுகாம்,விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு திட்டங்களை திறம்பட செய்துவந்தமையும் தனது பணிகளையும் கிண்ணியா மக்கள் சார்பாக பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இவர் மூதூர்,தோப்பூர் உட்பட தனது 05 வருட உபபொலிஸ் பரிசோதகர் சேவையினை பூர்த்திசெய்துள்ளமையும் ஒரு இளம் நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுடன் சேர்ந்து சகோதரனை போல் பணியாற்றிய கிண்ணியா சப் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரனை கண்ணீருடன் பிரிந்த ஊர் மக்கள். (படங்கள்) பொதுமக்களுடன் சேர்ந்து சகோதரனை போல் பணியாற்றிய  கிண்ணியா சப் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரனை கண்ணீருடன் பிரிந்த ஊர் மக்கள். (படங்கள்) Reviewed by Madawala News on 9/18/2017 06:10:00 PM Rating: 5