Kidny

Kidny

மூதூர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் சார்பாக இந்துனேசியா பயணமாகிறார் மூதூர் அமீர் சிபான் .


-Rafeek Sarraj-

இலங்கை நுகர்வோர் கூட்டுறவுச் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 10 பேர் அடங்கிய இந்தோனேசியாவுக்கான நாளைமுதல் (2017.09.11) ஐந்து நாள் கல்விச் சுற்றுலாவில் கலந்து கொள்ள உள்ளார் அமீர் சிபான்.

மூதூர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டிற்குப் பெரும் பங்காற்றிவரும் இவர் இக் கல்விச் சுற்றுலாவின் போது இந்துனேசியாவின் கூட்டுறவுத் துறைசார்ந்த பல முக்கிய இடங்களுக்கு கள விஜயம் மேற்க் கொள்வதோடு கூட்டுறவுத் துறைசார் கல்வி விடயங்களிலும் பங்குபற்ற உள்ளார்.

சங்கத்தின் பணிப்பாளராகவும் கிழக்கு மாகாண சட்டப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் கடமையாற்றும் இவர் மூதூர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் சங்கப் பிரதிநிதியாக இதில் பங்கேற்கவுள்ளார்.

இக் கல்விச் சுற்றுலாவில்  கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்கங்களில் இருந்து பங்கேற்கும் ஒரே ஒரு பிரதிநிதி இவர் என்பதும்  இவ்வாறான வெளிநாட்டு கல்விச் சுற்றுலாவில் மூதூர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் சார்பாக பங்கேற்று கலந்து கொள்ளும் இரண்டாவது நபர் இவர் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
மூதூர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் சார்பாக இந்துனேசியா பயணமாகிறார் மூதூர் அமீர் சிபான் . மூதூர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் சார்பாக இந்துனேசியா பயணமாகிறார் மூதூர் அமீர் சிபான் . Reviewed by Madawala News on 9/11/2017 08:48:00 AM Rating: 5