Kidny

Kidny

இளம் வயதிலேயே SLEAS ( ஆங்கில மொழி மூல) பரீட்சையில் சித்தியடைந்து கல்வித்திணைக்கள மட்ட அதிகாரியானார் ரிம்ஸான் அமானுல்லாஹ்.


SLEAS (English medium) பரீட்சையில் இளவயதில் சகோ றிம்ஸான் அமானுல்லாஹ் தேறிவிட்ட சேதி மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது.

ஆங்கில ஆசிரியராக அரச பணியை தொடங்கிய தோழர் றிம்ஸான் மிக விரைவாகவே SLPS பரீட்சையினை கடந்து அதிபரானார்.

அந்த சேதி கேட்டது நேற்றுப்போல்தான் இருக்கிறது அதற்குள் மற்றுமொரு பெரிய அடைவினை அவர் கடந்திருப்பதானது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

பரீட்சைகளை பிய்த்து உதறுகிறார் மனுசன்!

உசைன் போல்ட் வேகத்தில் நகர்கிற அவரது கற்கை அடைவுகளை அவதானிக்கிற போது, இன்னும் சில பரீட்சைகளை கடந்தால் இலங்கையின் கல்வி அமைச்சர் ஆகிவிடலாம் என்றதொரு நேர்மையான சிஸ்டம் இருந்தால் அதனையும் அடுத்த சில ஆண்டுகளில் சாதித்து முடிக்கும் விவேகத்தையும் வேகத்தையும் இறைவன் அவருக்கு அருளியிருக்கிறான்!

ஆனால் துரதிஷ்டம் இலங்கை போன்ற தேசங்களில் கல்வி அமைச்சராக வாய்க்கிறவர்களின் தராதரங்களை நான் சொல்லியா தெரிய வேண்டும்?

இவை றிம்ஸான்  SLEAS பரீட்சையில் பாஸாகிவிட்டார் என்பதற்கான வெறும் பாராட்டு எழுத்துக்கள் என்பதற்கு அப்பால் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு இதன் மூலம் ஒரு மெசேஜினை சொல்லியாக வேண்டும்.

கபொத உயர்தர பரீட்சையினை பொறுமையாக எழுதிக்கடப்பதற்கே முஸ்லிம் மாணவர்கள் கடும் பாடுபடுகிற காலம் இது!

இந்தக்காலத்தில் OL ஓடு ஓடிவிடுகிற மாணவர்களும் ஏராளம்! 
அவர்களுக்கு ஊக்கமளிக்கும் பெற்றோர்களும் தாராளம்!

மருத்துவம், பொறியியல், சட்டம், முகாமைத்துவம் என்று வாய்ப்புக்கள் கிடைப்பதே உயரிய சமூக அந்தஸ்த்து, அது தவறின் கட்டாரோ டுபாயோ காலத்தை வீணாக்காமல் காசு பார்க்க போய்விடலாம் என்ற கற்பிதம் வேகமாக இலங்கை முஸ்லிம் சமூகத்திற்குள் வளர்ந்து வருகிறது!

ஆசிரியத்தொழிலுக்கு முஸ்லிம் ஆண்கள் இணைவது வெகுவாக குறைந்து வருகிறது!

அதிலும் பல சிறந்த முஸ்லிம் பாடசாலைகளுக்கு தகுதியான அதிபர்கள் இல்லாத குறையும் கல்வித்திணைக்களங்களில் தரமான கல்வி அடைவு பெற்ற முஸ்லிம் அதிகாரிகள் இல்லாத குறையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன!

இந்த பின்புலத்தில் தோழர் றிம்ஸானின் கல்வி அடைவானது அனைவருக்கும் முன்னுதாரணமாகும்.

35 வயதில் SLEAS பரீட்சையில் சித்தியடைந்து கல்வித்திணைக்கள மட்ட அதிகாரியாக ஆவதென்பது மிக்க பாராட்டிற்கும் அவதானத்திற்கும் உரியது.

வழமையாகவே இவ்வாறான பரீட்சைகளை வயதாகி கடந்தவர்களே ஏராளம்.

இந்த குறிப்பை வாசிக்க கிடைக்கிற மாணவர்கள் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் ஆண் மாணவர்கள் கவனிக்க வேண்டியது மருத்துவம், பொறியியல், சட்டம், வணிகம் போன்ற துறைகளுக்கு அப்பாலும் உங்களை உச்சம் கொண்டு போக கூடிய ஒரு துறை இருக்கிறது.

அதுதான் கல்வி நிர்வாகத்துறை. 

ஆசிரியத்தில் ஆரம்பித்து அதிகாரிகள் மட்டம் என உயர்ந்து செல்லலாம். அதன் மூலம் பல அறிவார்ந்தவர்களை சமூகத்தில் உருவாக்கும் பணியை செய்யலாம்.

அந்த துறை மீதான அக்கரையும், கவனமும் முஸ்லிம் சமூகத்தின் ஆண் மாணவர்கள் மத்தியில் நலிந்து வருகிறது...

அவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக றிம்ஸானின் வளர்ச்சிப்பாதை இருக்கிறது.

வாழ்த்துக்கள் றிம்ஸான்.

இவரைப்போல் பலரை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் இருக்கிறது என்பது தெளிவு.

- வாழ்த்துக்களுடன் முஜீப் இப்ராஹிம்-
இளம் வயதிலேயே SLEAS ( ஆங்கில மொழி மூல) பரீட்சையில் சித்தியடைந்து கல்வித்திணைக்கள மட்ட அதிகாரியானார் ரிம்ஸான் அமானுல்லாஹ். இளம் வயதிலேயே SLEAS ( ஆங்கில மொழி மூல) பரீட்சையில் சித்தியடைந்து கல்வித்திணைக்கள மட்ட அதிகாரியானார் ரிம்ஸான் அமானுல்லாஹ். Reviewed by Madawala News on 9/14/2017 09:14:00 PM Rating: 5