Ad Space avaiable

சுதந்திர கட்சியை விட்டு விலகிச் செல்பவர்கள் அனைவரையும் மீண்டும் ஒன்றிணைப்போம். அப்புறம் தேர்தல்களை வெல்வோம்.


சிறிலங்கா சுதந்திர கட்சியை விட்டு விலகிச் செல்பவர்கள் அனைவரையும் மீண்டும் ஒன்றிணைத்து எதிர்வரும் தேர்தல்களை வெற்றிகொள்ள எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்திலும் சிறிலங்கா சுதந்திர கட்சியை விட்டு பலர் விலகிச் சென்றாலும் மீண்டும் அவர்கள் கட்சியுடன் ஒன்றிணைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்துக்களை வௌியிட்டார்.

மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உயர்நீதிமன்றதில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்தமை தொடர்பில் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர கட்சியை விட்டு விலகிச் செல்பவர்கள் அனைவரையும் மீண்டும் ஒன்றிணைப்போம். அப்புறம் தேர்தல்களை வெல்வோம். சுதந்திர கட்சியை விட்டு விலகிச் செல்பவர்கள் அனைவரையும் மீண்டும் ஒன்றிணைப்போம். அப்புறம்  தேர்தல்களை வெல்வோம். Reviewed by Madawala News on 9/30/2017 02:42:00 PM Rating: 5