Kidny

Kidny

அடித்தது லக்கு.. உலகக்கிண்ண நேரடி தகுதியை நோக்கி இலங்கை அணி.

 
- Hassim Mohamed Naleem-

அயர்லாந்தில் மழை, உலகக்கிண்ண நேரடி தகுதியை நோக்கி இலங்கை அணி.

இன்று நடைபெறவிருந்த அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையேயான ஒரேயொரு ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 

இதனால் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில், ஒரு போட்டியில் தோல்வியுற்றால் கூட 2019 உலக கிண்ணத் தொடருக்கான நேரடித்தகுதியை இழக்கும் நிலையில் மேற்கிந்திய அணி காணப்படுகின்றது.


இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 உலக கிண்ணப் போட்டிகளில் 10 அணிகள் பங்குபற்ற உள்ளன. அவற்றில் ஏழு அணிகள் தரவரிசையின் அடிப்படையிலும், போட்டியை நடத்தும் இங்கிலாந்துமாக மொத்தமாக எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெறவுள்ளன. 


போட்டியை நடத்தும் நாடாக இங்கிலாந்து நேரடியாக தகுதி பெற்று விட்டது. 2017 செப்டம்பர் 30 அன்று இங்கிலாந்து தவிர தரவரிசையில் முதல் ஏழு இடத்திலும் உள்ள அணிகளும் உலக கிண்ணப் போட்டிகளுக்கு நேரடியாக தகுதி பெறும்.


தற்போது இங்கிலாந்தை விட தரவரிசையில் முதல் ஆறு இடத்திலுமுள்ள தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் நேரடியான தகுதியை உறுதிப்படுத்தியுள்ளன.


இந்திய அணிக்கெதிராக சொந்த மண்ணில் 5-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி தற்போது 86 புள்ளிகளுடன் தரவரிசையில் எட்டாமிடத்தில் உள்ளது. அதே வேளை, மேற்கிந்திய தீவுகள் 78 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.


இன்று அயர்லாந்து அணியுடனான போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி 4-0 அல்லது 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வெற்றி பெற்றால் மட்டுமே நேரடித் தகுதியைப் பெறும். 

ஆக மேற்கிந்திய அணி, ஒரு போட்டியில் கூட இங்கிலாந்திடம் தோல்வியடைந்தாலும், இலங்கை அணியே நேரடியாக தகுதி பெறும்.
அடித்தது லக்கு.. உலகக்கிண்ண நேரடி தகுதியை நோக்கி இலங்கை அணி. அடித்தது லக்கு.. உலகக்கிண்ண நேரடி தகுதியை நோக்கி இலங்கை அணி. Reviewed by Madawala News on 9/13/2017 09:37:00 PM Rating: 5