Kidny

Kidny

ஜேர்மன் நாட்டு உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளரின் கீழ் பயிற்சி பெற ஒரு அரிய வாய்ப்பு..


தற்போது  மலேஷியா,இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிரந்தர வதிவிட பிரதிநிதியும் இலங்கை கடற்படை, கண்டி மத்யம லங்கா ஆகிய அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தியவருமான இர்ஷாட் அஸீஸ் மற்றும் ஜேர்மனிய உதைபந்தாட்ட அணியான FC –ROT – WEISIS ERFUR அணிக்காக விளையாடும் வஸீம் ரஸீக் அவர்களின் தந்தை ஜமால் ரஸீக் (இலங்கை தேசிய ​ஹாக்கி அணியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்) ஆகியோரின் முயற்சி மற்றும் அனுசரனையின் கீழ் முன்னால் ஜேர்மன் நாட்டு தேசிய உதைப்பந்தாட்ட வீரரும் தற்போது 1FC Union Berlin Germany  உதைபந்தாட்ட கழகத்தின் பயிற்றுவிப்பாளருமான Oliver Rathenow உதைப்பந்தாட்ட பயிற்சி முகாம் ஒன்றினை நடாத்துவதற்காக 2018ம் ஆண்டு இலங்கை வர உள்ளார்.

இந்த உதைப்பந்தாட்ட பயிற்சி முகாம் மூலம் பாடசாலை மாணவர்கள், உதைப்பந்தாட்ட கழகங்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு விஷேடமான சர்வதேச ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

குறிப்பிட்ட இந்த பயிற்சி முகாமில் விஷேட திறமைகளை வெளிக்காட்டும் வீரர்களுக்கு ஜேர்மன் நாட்டின் விஷேட புலமைபரிசில் வாய்ப்புக்களும் வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி முகாமானது பாகிஸ்தான், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுள்ளதோடு தற்போது மலேஷியாவில் நடைபெற்றுவருகின்றது.


இந்த உதைபந்தாட்ட பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் தமது சுயவிபரக் கோவையினை irshadazeez@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

மேலதிக விபரங்களுக்கு

Whatsapp         -  +60193008004

facebook  : Irshad Azeez
ஜேர்மன் நாட்டு உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளரின் கீழ் பயிற்சி பெற ஒரு அரிய வாய்ப்பு.. ஜேர்மன் நாட்டு உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளரின் கீழ் பயிற்சி பெற ஒரு அரிய வாய்ப்பு.. Reviewed by Madawala News on 9/13/2017 10:51:00 PM Rating: 5