tg travels

"தவிர்க்கப்பட முடியாத முன்னணி கவிஞராக சோலைக்கிளி"


சோலைக்கிளியின் 11 நூல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. அவருடைய கவிதை பாணி வாசகர்கள் மத்தியிலும் பின்நாட் களில் வந்த கவிஞர்கள் மத்தியிலும்பெரும் செல்வாக்கையும், வரவேற்பையும் பெற் றவை பாரம்பரிய மனோபாவம் கொண்ட பழமை வாதத்தில் பற்றுறுதி கொண்ட எழுத்தாளர்களும், விமர்சகர்களும் ஆரம்பத்தில் சோலைக்கிளிக்கு எதிராக கடு மையான விமர்சனங்களை முன் வைத்து பார்த்தனர்.

பழையன கழிந்து புதியன புகுதல் என்ற நியதிக்கு அமைய நாளடை வில் அவர் தவிர்க்கப்பட முடியாத முன்னணிக் கவிஞராக தன்னை நிலை நிறுத்தி கொண்டார் என பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன் குறிப்பிட்டார்.


உள்ளூரிலும் சர்வதேசரீதியிலும் பல விரு துகளைப்பெற்ற பிரபல கவிஞர் சோலைக்கிளியின் நெடுப்பமாய் இருந்த பந்தல், மண்கோழி ஆகிய இரு நூல்களின் வெளி யீட்டு விழா கல்முனை மிஷ்பா வித்தியால யத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந் து கொண்டு உரையாற்றும் போதே இவர் இதனைத் தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த இடத்தை அவர் அடைந்தது அதிர்ஷ்டத் தாலோ அல்லது குறுக்கு வழியாலோ அல்ல படைப்பாற்றலால் மாத்திரமே.


படைப்பிலக்கியம் என்பது அவருடைய வாழ்வின் ஒரு பகுதி மாத்திரம் என்று சொன்னால் அது சரியாகாது படைப்புக் காகத் தன்னை அர்ப்பணித்து அதில் அப்ப டியே தோய்ந்தவர் அவர் அவரே கூறுவது போல் அவருக்கும் கவிதைக்குமான உறவு தேங்காய்க்கும் அதனுள்ளிருக்கும் தண்ணி ருக்குமான உறவு அல்லது அலைக்கும் கடலுக்குமான உறவு.

அவர் இயற்கை யின் உபாசகன் இயற்கையை இந்தளவு க்குத் திகட்டத் திகட்டக் கூறிய இன்னொரு படைப்பாளியைக் காண்பது அரிது
அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரண மனநிலையுடன் பார்க்கும் பல விடயங்களை இவர் கலை கோணத்தில் பார்க்கின்ற தன்மையுடையவர்.

இந்த பிரதேசத்தின் வாழ்வையும், மனித நடத்தைகளையும் கிராமிய மணம் கமழ அவர் விபரித்துச் செல்லும் பாங்கை வியந்து பார்த்திருக் கின்றேன். இந்த மண்ணிலிருந்தும் மண் ணைத் தோண்டியும் கடலிலிருந்தும் ஆகாய த்திலிருந்தும் புதையல்களை வெளிக் கொணர்ந்து கொட்டும் வித்தை அவருக் கேயுரியது. இந்த கற்பனை வளமும் படைப்பாற்றலுந்தான் அவருக் குப் பல வாசகர்களை பெற்று தந்திருக்கின்றன என்றார்.

"தவிர்க்கப்பட முடியாத முன்னணி கவிஞராக சோலைக்கிளி" "தவிர்க்கப்பட முடியாத முன்னணி கவிஞராக சோலைக்கிளி" Reviewed by Madawala News on 9/13/2017 03:05:00 PM Rating: 5