Kidny

Kidny

இலங்கை T20 அணியில் மாற்றம்.


Hassim Mohamed Naleem-

இம்மாதம் 6ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இந்திய அணிக்கெதிரான நடைபெறவுள்ள T-20 போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி குழாமில் இசுரு உதான மற்றும் தசுன் சானக்க ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

சகல துறை வீரரான தசுன் சானக்க இதுவரையில் 12 T-20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். பெப்பரவரி மாதம் அவுஸ்திரேலியஅணிக்கெதிரான மூன்றாவது T-20 போட்டியில் இறுதியாக விளையாடிய அவர் இரண்டுவிக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

அதேபோன்று, 2009ஆம் ஆண்டு அறிமுகமான இடதுகை மித வேகப்பந்து வீச்சாளரான இசுரு உதான இதுவரையில் 8 T-20 சர்வதேச போட்டிகளில் 9 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதுடன், 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றிய சிறப்புப்பந்து வீச்சு பிரதியையும் கொண்டுள்ளார். இவர் இறுதியாக ஜனவரி மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான T-20 தொடரில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித்தொடர்களை முழுமையாக இழந்த இலங்கை அணிக்கு நடைபெறவிருக்கும் T-20 போட்டி சவால் மிக்கதாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இலங்கை T20 அணியில் மாற்றம். இலங்கை T20 அணியில் மாற்றம். Reviewed by Madawala News on 9/04/2017 06:44:00 PM Rating: 5