Ad Space Available here

ஆன்ட்ராய்ட் மொபைல் இல் மிக இலகுவாக, வேகமாக தமிழில் டைப் செய்யலாம்.


இன்றைய நவீன உலகில் எல்லாமே இலகுவாகிவிட்டது. நமது தேவையை விட வேகமாக தொழில்நுட்பம் வளர்ந்தது வருகிறது. இந்த கட்டுரை மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தொழில்நுட்பத்தை எழுதுவதில் சந்தோசமாக இருக்கிறது. இன்று நாம் "மிக இலகுவாக ஆன்ட்ராய்ட் இல் வேகமாக தமிழில் டைப் செய்யலாம்... இனி கஷ்டம் இல்லை..." என்ற தலைப்பில் பார்க்க இருக்கின்றோம்.


முன்னொரு (ஒரு ஐந்து வருடத்திற்கு முதல்) பொழுதில் தமிழ் டைப் பண்ண தேவையானால் அதற்கென்று Kalaham என்றொரு font மற்றும் அதற்கான Keyboard Map ஒன்றும் (என்னென்ன எழுத்து எந்தெந்த keyக்கு வரும் என அறிய) தேவைப்படும். பலமணி நேரம் எடுத்து டைப் பண்ணி முடிப்போம்.


பின்னர் யுனிக்கோட் அறிமுகமான போதும் அதெற்கென சில எழுத்துருக்கள் (Fonts) தேவைப்பட்டன. உதாரணமாக சில தமிழ் தளங்களை பார்வையிட சில எழுத்துருக்கள் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டிய தேவையும் இருக்கும். இதெல்லாம் அறியாவிட்டால் எல்லா எழுத்துக்களும் கட்டம் கட்டமாக தோன்றும். (Square)

தற்போது அதிகமானவர்கள் ஸ்மார்ட் போன் உபயோகிப்பதால் தமிழ் மொழியின் தேவையும் அதை வேகமாக டைப் பண்ண வேண்டிய தேவையும் அதிகரித்திருக்கிறது. தமிங்கிலீஷ் கீபோர்ட், தமிழ் கீபோர்ட் மேப், கூகிள் கீபோர்ட், எழுத்தாணி கீபோர்ட் என பலவகை கீபோர்ட் அப்ளிகேஷன்ஸ் வந்திருக்கும்போதிலும் நமக்கு அதன் வேகம் போதவில்லை. அப்படித்தானே???


ஆம். நாம் இன்று பார்க்கப்போகும் முறை மூலம் நாம் தமிழில் பேசுவதை தமிழில் நமக்கு டைப் பண்ணித்தரும் ஒரு முறையை கற்றுக்கொள்ளப்போகின்றோம். இதற்காக தனியான அப்ளிகேஷன்ஸ் எதுவும் தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட் போனில் சில செட்டிங்களை செய்வதன் மூலம் இதை செயற்படுத்திக்கொள்ளலாம்.


அதற்குமுன் பின்வரும் சில விடையங்களை கட்டாயம் பின்பற்றவேண்டும். அவற்றை சரியாக செய்யாமல் "எவ்வளவு லேசா சொன்னான் ஒண்டும் நடக்கல பாருங்க" என்று எனக்கு திட்டக்கூடாது.

1. இவ்வசதியை பயன்படுத்த கட்டாயம் இன்டர்நெட் அவசியம்.

2. செந்தமிழோ, பைந்தமிழோ, எழில்தமிழோ, குறைதமிழோ கொஞ்சம் நிதானமாகவும் மெதுவாகவும் சரியாகவும் பேச வேண்டும்.

3. பெயர் ஸ்மார்ட் போன் என்றாலும் அது உங்கள் அளவுக்கு ஸ்மார்ட் இல்லை என்பதை கவனத்தில் கொள்க.
என்னடா இவன் பேசிக்கிட்டே இருக்கான் விசயத்த சொல்ரான் இல்ல என்று (உங்கள் மைண்ட் வாய்ஸ்) கவலைப்பட வேண்டாம். வாங்க வந்த விசயத்த பார்ப்போம்...


1. உங்கள் அண்ட்ராய்டு போன் இல் Settings க்கு செல்லவும்
2. அங்கு Language and Input என்பதை திறக்கவும்
3. அதில் காணப்படும் Google Voice Typing என்பதை திறக்கவும்
4. அதில் காணப்படும் Languages என்பதை திறக்கவும்
5. அங்கு காணப்படும் Choose Input Languages என்பதை திறக்கவும்
6. அதில் Automatic என்பது சரி "டிக்" செய்யப்பட்டிருந்தால் அதையும் மற்ற அனைத்து சரி "டிக்" எடுத்துவிடவும்.

7. Languages இல் "தமிழ் ( இலங்கை)" or "தமிழ் ( இந்தியா)" என்பதை (எதாவது ஒன்றை மட்டும்) செலக்ட் செய்து டிக் பண்ணவும்.
8. Back பண்ணி பின்னர் எங்கு டைப் பண்ண தேவை உள்ளதோ அந்த Application ஐ திறக்கவும் (Eg: Whatsapp)
9. Typing சென்றவுடன் வரும் Keyboard இல் உள்ள ஒலிவாங்கி (MIC) ஐ 3 செக்கன்கள் அழுத்திப்பிடித்து பின் விடுவிக்கவும் (Long Press)
10. இப்போது மேலே கூறப்பட்ட விதிமுறைகளுடன் பேசவும்.
11. Pause என்பதை தொட்டால் Typing நிறுத்தப்படும். தொடர மீண்டும் அதே பட்டனை தொடவும்.

அவ்வளவுதான்... உங்கள் கருத்துக்களை முடிந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்.

இந்த கட்டுரையின் பெரும் பகுதி இம்முறை மூலம் HTC 816G மூலம் டைப் பண்ணப் பட்டது என்பதையும் இதில் எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் உள்ளடங்கி இருப்பதையும் கவனத்தில் கொள்ளவும். தமிழ் எழுத்துப்பிழைகள் இருந்தால் என்னை மன்னிப்பதோடு எனது மின்னஞ்சலுக்கு சுட்டிக்காட்டவும்.
எல்லோரையும் இனி எல்லா இடத்திலும் தமிழை சத்தமாகவும் திருத்தமாகவும் நிதானமாகவும் பேசவைத்த திருப்தியுடன் விடைபெறுகிறேன். மீண்டும் சந்திப்போம். இன்ஷா அல்லாஹ்.என்றென்றும் அன்புடன்,
மபாஸ் முஹைதீன் 
mafazbinmohideen@gmail.com
ஆன்ட்ராய்ட் மொபைல் இல் மிக இலகுவாக, வேகமாக தமிழில் டைப் செய்யலாம். ஆன்ட்ராய்ட் மொபைல் இல் மிக இலகுவாக, வேகமாக தமிழில் டைப் செய்யலாம். Reviewed by Madawala News on 9/11/2017 10:42:00 AM Rating: 5