tg travels

திலங்க சுமதிபால கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்ககமதிபால தனது பதவியிலிருந்து விலகும் கட்டம்.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்ககமதிபால தனது பதவியிலிருந்து வில கப்போவதாக கூறியுள்ளார்.


இலங்கை அணியின்தொடர்தோல்விகளை அடுத்து அணித் தலைவர்கள், தேர்வுக் குழு வினர் விலகிவரும் நிலையில், கிரிக்கெட் சபையின் தலைவர் நிலங்க சுமதிபால தனது பதவியிலிருந்துவிலகி கிரிக்கெட் சபைக்கான புதிய நிர்வாகத்தை தேர்வுசெய்வதற்கான தேர் தலைமுன்கூட்டியே நடத்துவதற்கு ஆலோசி த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தன்னை அவதானுக்குட்படுத்தும் விதத்தில் 2009 இல் கருத்துகள் வெளியிட்டதாக கூறி 500 மில்லி யன் ரூபா மானநஷ்டம் கோரி தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வெளியானது .

இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது திலங்க கமதிபாலவுக்கு பெரும்
பின்னடைவாக அமைந்துள்ளது. 

இந்த வழக்கு விசாரனையின் போது
திலங்க சுமதிபாலவின் குடும்பத்தினர் நடத் தும் சூதாட்டப் பந்தயம் தொடர்பாக கேட் கப்பட்ட கேள்விகளுக்கு அதற்கும் தனக்கும் தொடர்பிருப்பதாக அவர் தெரிவித்ததைய தது அவர் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டார்.


விளையாட்டுகளில் இருந்து சூதாட்டத்தை முற்றாக ஒழிக்கவேண்டும் என்ற கோஷம் உலகளாவியரீதியில் ஒலித்து வருகையிலும் ஆள் நிர்ணய சதி மற்றும் சூதாட்டத்திற்கு எதிரான சர்வதேச கிரிகெட் சபை மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையிலும் சூதாட்டத்தை குடும்பத் தொழி லாகக் கொண்ட ஒருவர் எப்படி ஒரு நாட்டின் கிரிக்கெட் சபையின் தலைவராக இருக்க முடியும் என்ற கேள்வியும் இதன்போது எழுப் பப்பட்டது.


இந்த நிலையில் அடுத்த வருடம் மே மாதம் அளவில் இலங்கை கிரிக்கெட்சபைக்கு புதிய நிர்வாக சபை தெரிவுசெய்ய வேண்டிய நிலையில், இவ்வருட பிற்பகுதிக்குள் தனது பதவியிலிருந்து விலகி புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்கு இடமளிக்கப்போவதாக திலங்க சுமதிபால கூறியுள்ளார்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற இலங்கை
கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழுக்கூட்டத் தில், தான் தலைவர் பதவியிலிருந்து விலக விரும்புவதாக திலங்க சுமதிபால தெரிவித்த அதேவேளை, புதியதிர்வாகென் தெரிவுசெய் பும் வரை அவரை தொடர்ந்து அப்பதவியில் இருக்குமாறு நிர்வாக சபையினர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் விரைவில் அவர் கிரிக்கட் சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகக்கூடிய சாத்தியம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



திலங்க சுமதிபால கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்ககமதிபால தனது பதவியிலிருந்து விலகும் கட்டம். திலங்க சுமதிபால கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்ககமதிபால தனது பதவியிலிருந்து விலகும் கட்டம். Reviewed by Madawala News on 9/04/2017 04:46:00 PM Rating: 5