Kidny

Kidny

வருமான வரி தொடர்பான புதிய சட்டமூல உரை..


வருமான வரி தொடர்பான புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவர முடிந்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும், நாட்டை நேசிப்பவர்களாக இருந்தால் தன்னால் முடிந்தளவு வரியை செலுத்துவது அவசியம் எனவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

தேசிய வருமான வரி சட்டமூலம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டியது காலத்தின் தேவையாக மாறியுள்ளது என இதன்போது சுட்டிக்காட்டிய மங்கள, இந்த வரலாற்று சிறப்புமிக்க சட்டமூலத்திற்கு அனைவரது ஆதரவும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் எனவும் கூறியுள்ளார். 

அவர் இதன்போது மேலும் கூறியுள்ளதாவது, 

குறைந்த வரி கிடைக்கும் நாடுகள் வரிசையில் இலங்கையும் வந்துள்ளது, இந்த நாட்டில் வரி சுமையை எதிர்நோக்குபவர்கள் சாதாரண மக்களே அன்றி வருமானம் பெறுவோர் அல்ல. நாம் இந்த வலையத்தில் இறுதியில் உள்ளோம். 

நாட்டில் இருக்கும் 20 வீதமான செல்வந்தர்கள் 51.9 வீத வருமானத்தை நிர்வகிக்கின்றனர். வறியவர்கள் 4 வீத வருமானத்தை பெறுகின்றனர். 

மறைமுக வரிகளை செல்வந்தர்களும், வறியவர்களும் சமமாகவே செலுத்துகின்றனர். 


இதனால், நேரடியான வருமான வரிகளை அதிகரிக்க வேண்டும். தேசிய ரீதியாக நாட்டை அபிவிருத்தி செய்ய மறைமுக வரிகள் குறைக்கப்படுவதை எதிர்ப்பவர்கள் யார்? மறைமுக வரிகளை நாங்கள் குறைக்க எதிர்பார்த்துள்ளோம். 


சர்வதேச வரி கோப்பு இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளோம். இது ஒரு சாதாரண நடைமுறை. அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை. ஒரு இலட்சம் ரூபாவுக்கு குறைவான வருமானத்தை பெறுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார். 
வருமான வரி தொடர்பான புதிய சட்டமூல உரை.. வருமான வரி தொடர்பான புதிய சட்டமூல உரை.. Reviewed by Madawala News on 9/07/2017 04:42:00 PM Rating: 5