Kidny

Kidny

ஆர்ப்பாட்டகுற்றம்... பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்யுமாறு கொழும்பு முதன்மை நீதிமன்றம் பிடியாணை.


பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்கவுக்கு கொழும்பு முதன்மை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.


அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்து வந்த குற்றச்சாட்டின் கீழேயே அவருக்கு இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினராவார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வீரகுமா திஸாநாயக்க இன்று முன்னிலையாகாமை காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு காவல்துறையால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டகுற்றம்... பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்யுமாறு கொழும்பு முதன்மை நீதிமன்றம் பிடியாணை. ஆர்ப்பாட்டகுற்றம்...  பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்யுமாறு  கொழும்பு முதன்மை நீதிமன்றம் பிடியாணை. Reviewed by Madawala News on 9/18/2017 12:02:00 PM Rating: 5