tg travels

உங்கள் அபிமான UNP க்கு நாளை 71 வது பிறந்த நாள் ..




ஐக்கிய தேசியக் கட்சி 71ஆவது நிறைவாண்டை நாளை கொண்டாடுகிறது.
               
சோல்பரி அரசியலமைப்பின் கீழ், நடத்தப்பட்ட முதலாவது பொதுத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக் கூட்டம் கொழும்பு பாம் கோட் மாளிகையில் 1946ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 6ம் திகதி இடம்பெற்றது. கட்சியின் தலைமைப் பதவிக்கு டி.எஸ்.சேனாநாயக்கவின் பெயரை எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க முன்மொழிந்தார். 
 
ஐக்கிய தேசியக் கட்சி என்ற பெயரை அமரர் எஸ்.நடேசன் முன்மொழிந்தார். கட்சியின் உப தலைவர்களாக சேர். ஜோன் கொத்தலாவல, எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க. ஜோர்ஜ் ஈ டி சில்வா, ரி.பீ.ஜயா , ஏ.ஏ.மஹாதேவ ஆகியோர் தெரிவு செய்யப்படடார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுச் செயலாளர் எச்.டபிள்யு.அமரசூரிய.. கட்சியின் இணைப்பொருளாளர்களாக சேர் ராசிக் பரீட், ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள்.
 
கட்சியின் யாப்பை வரையும் பொறுப்பு எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க, சேர் பிரான்சிஸ் மொலமுரே ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
உங்கள் அபிமான UNP க்கு நாளை 71 வது பிறந்த நாள் .. உங்கள் அபிமான UNP க்கு நாளை 71 வது பிறந்த நாள் .. Reviewed by Madawala News on 9/05/2017 08:48:00 PM Rating: 5