Kidny

Kidny

Bad Weather... ஐக்கிய தேசியக்கட்சியின் 71 வது ஆண்டு நிறைவு விழா பிற்போடப் பட்டது.


நாளை மறுதினம் நடைபெற இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் 71 வது ஆண்டு நிறைவு விழாவை தற்காலிகமாக பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் 71 வது ஆண்டு நிறைவு விழாவை எதிர்வரும் 10ம் திகதி இரத்தினபுரி சீவலி மைதானத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இரத்தினபுரி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்கள் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் நிகழ்வை பிற்போடுவதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டதாக பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா கூறினார்.

கட்சியின் ஆண்டு நிறைவு விழா நடைபெறும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Bad Weather... ஐக்கிய தேசியக்கட்சியின் 71 வது ஆண்டு நிறைவு விழா பிற்போடப் பட்டது. Bad Weather... ஐக்கிய தேசியக்கட்சியின் 71 வது ஆண்டு நிறைவு விழா பிற்போடப் பட்டது. Reviewed by Madawala News on 9/08/2017 02:34:00 PM Rating: 5