Ad Space Available here

புதிய அரசியலமைப்பின் மூலம் ஈழத்தை உருவாக்க முயற்சி... விட மாட்டோம்.


புதிய அர­சியல் அமைப்பின் மூல­மாக மத்­திய அர­சாங்­கத்தை பல­வீ­னப்­ப­டுத்தி தமிழ் பிரி­வி­னை­வா­தி­களின் தேவையை நிறை­வேற்ற முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. தமி­ழீ­ழத்தை உரு­வாக்கும் அடித்­த­ளத்தை ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் இட்­டுள்­ள­துடன் சர்­வ­தேசத்திற்கான வாக்­கு­று­திகள் மெது­வாக நிறை­வேற்றப்பட்டு வரு­கின்­றன என்று தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பொது எதி­ரணி உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச எம்.பி.தெரி­வித்தார்.

புதிய அர­சியல் அமைப்பின் மூல­மாக தமிழ், முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னைகள் தீரப்­போ­வ­தில்லை. சர்­வ­தேச தரப்பே

வடக்கை ஆளப்­போ­கின்­றது எனவும் அவர் தெரி­வித்தார்.

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் கட்சி அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனை தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

நாட்டில் தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வ­தாக கூறி அர­சியல் அமைப்பு சபையின் ஊடாக புதிய அர­சியல் அமைப்புக்கான இடைக்­கால அறிக்கை கொண்­டு­வ­ரப்­பட்ட போதிலும் இந்த அர­சியல் அமைப்பு இந்த நாட்­டினை பிரிக்கும் பிரி­வி­னை­வாத சக்­தி­க­ளுக்கு சாத­க­மான ஒன்­றா­கவே அமைந்­துள்­ளது. இதனை மூடி­ம­றைத்து மக்­களை ஏமாற்றும் வகையில் அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­ற­மேயே உண்­மை­யாகும்.

மிக நீண்ட கால­மாக இந்த நாட்டில் தமிழ் பிரி­வி­னை­வாத சக்­திகள் தமது இலக்­கினை அடைந்­து­கொள்ள அர­சியல் அமைப்பு மூலம் வாய்ப்பை பயன்­ப­டுத்த முயற்­சித்­தன. 13 ஆம் திருத்­தத்தை கொண்­டு­வந்த போதும் ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்­றத்தில் பொய்­களை கூறியே அதனை நிறைவேற்றியது. மக்கள் கருத்தை நிரா­க­ரித்து நீதி­மன்­றத்தின் கருத்தை கொண்டு நிறை­வேற்றிக் கொண்டனர். இன்று ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கமும் புதிய அர­சியல் அமைப்பை மக்கள் வாக்­கெ­டுப்பு இல்­லாது தமது அதி­கா­ரத்தை மாத்­திரம் கொண்டு நிறை­வேற்ற பார்க்­கின்­றது.

புதிய அர­சியல் அமைப்பு திருத்­தத்தையும் கூட மோச­மான வகையில் தான் நிறை­வேற்ற அர­சாங்கம் முயற்­சித்து வரு­கின்­றது. சமஷ்டி என்ற அடிப்­ப­டையில் கொண்­டு­வ­ரவே அர­சாங்கம் முயற்­சி­கின்­றது. பொலிஸ் , காணி, நிதி முகா­மைத்­துவம் அனைத்தும் மாகா­ண­ச­பை­க­ளுக்கு வழங்­கப்­பட்டு மத்­திய அர­சாங்­கத்தை பெய­ர­ளவில் செயற்­ப­டுத்­தவே அர­சாங்கம் முயற்­சித்து வரு­கின்­றது. ஒரு புறம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நியூயோர்க்கில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யா­ளரை சந்­தித்து அவர்­களின் வலி­யு­றுத்­தல்­களின் பிர­காரம் இலங்­கையில் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக கூறு­கின்றார், காணமால் ஆக்­கப்­பட்டோர் குறித்து சர்­வ­தேச சம­வா­யத்தில் கைச்­சாத்­திட்­டுள்­ள­தா­கவும் கூறு­கின்றார்.

 மறு­புறம் இலங்­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சட்­டத்­தையும், ஜன­நா­ய­கத்­தையும் புறக்­க­ணித்து புலம்­பெயர் அமைப்­புகள், சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கும் வடக்கு பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கும் ஏற்ற வகையில் அர­சியல் அமைப்பை உரு­வாக்கி செல்­கின்­றனர். ஆகவே இந்த அர­சியல் அமைப்பு பிரி­வி­னை­வாத சக்­தி­களின் ஒரே தேவைக்­காக மாத்­தி­ரமே முன்­னெ­டுக்­க­பட்டு வரு­கின்­றது.

ஒன்­பது துண்­டு­க­ளாக நாடு பிரிக்­கப்­பட்ட பின்னர் இந்த நாடு எவ்­வாறு ஐக்­கி­யப்­படும். வடக்கு கிழக்கில் ஒரு சட்­டமும் ஏனைய பகு­தியில் வேறு வித­மா­கவும் செயட்­ப­டுத்­தவா எமது இரா­ணு­வத்தின் 27 ஆயிரம் உயிர்கள் பலி­கொ­டுக்­கப்­பட்­டது. மக்கள் இப்­போதும் அமைதி காத்து இந்த அர­சியல் அமைப்­பிற்கு இடம் கொடுத்தால் நாடு பிள­வு­படும். தனித்து தனி இராச்­சியம் ஒன்றை உரு­வாக்­கவே தமிழ் பிரி­வினை வாதிகள் முயற்­சித்து வரு­கின்­றனர். அதன் பின்னர் யுத்­த­குற்றம் வலி­யுறுத்­தப்­படும். இது நிரூ­பிக்­கப்­பட்டால் ஐக்­கிய நாடுகள் சபையின் உத­வி­யுடன் தமி­ழீழம் உரு­வாக்­கப்­படும்.

காணமால் போனோரை கண்­ட­றிய நீதி­மன்றம் உரு­வாக்­கப்­படும், இந்த தலை­யீ­டுகள் மூல­மாக இறு­தியில் தமிழ் ஈழம் உரு­வாக்­கப்­படும். இதனை உரு­வாக்­கு­வதால் தமிழ், முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டம்­போ­வ­தில்லை. சர்­வ­தேச தரப்பே வடக்கை ஆளப்­போ­கின்­றது. ஆகவே இந்த நாட்­டினை பிரி­வி­னைக்கு உட்­ப­டுத்தும் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக அனைத்து மக்­களும் இணைந்து போராட வேண்டும்.

தமிழ் பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கு ஏற்ற வகையில் இந்த நாட்டினை இரத்த வெள்ளத்தில் மீண்டும் மூழ்கடிக்கச் செய்யும் இந்த செயற்பாடுகளை தடுக்க வேண்டும். நாட்டை சர்வதேசத்திற்கு காட்டிக்கொடுக்கும் துரோக அரசியல் அமைப்பை நிறைவேற்ற இடமளிக்கக் கூடாது. இரத்தம் சிந்தி தக்க வைத்த ஒற்றையாட்சி நாட்டை அழிக்கவே இவர்கள் முயற்சித்து வருகின்றனர். மத்திய அரசாங்கத்தை பலவீனப்படுத்தி நாட்டை துண்டாட இடமளிக்கவே முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய அரசியலமைப்பின் மூலம் ஈழத்தை உருவாக்க முயற்சி... விட மாட்டோம். புதிய அரசியலமைப்பின் மூலம் ஈழத்தை உருவாக்க முயற்சி... விட மாட்டோம். Reviewed by Madawala News on 9/25/2017 10:59:00 AM Rating: 5