Kidny

Kidny

தலைகுப்புற கவிழ்ந்த வாகனம்.. படுகாயங்களுக்கு உள்ளாகி பெண் உயிரிழப்பு.


கிளிநொச்சி - பூநகரிப் பகுதியில் இன்று காலை வாகனமொன்று தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில் பெண்ணொருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

பரந்தன் - பூநகரி வீதியூடாக பயணித்துக் கொண்டிருந்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில், படுகாயமடைந்தவர் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, வாகனத்தில் பயணித்த ஏனையோர் சிறுகாயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண் உயிரிழந்துள்ளதார்.
தலைகுப்புற கவிழ்ந்த வாகனம்.. படுகாயங்களுக்கு உள்ளாகி பெண் உயிரிழப்பு. தலைகுப்புற கவிழ்ந்த வாகனம்.. படுகாயங்களுக்கு உள்ளாகி பெண் உயிரிழப்பு. Reviewed by Madawala News on 9/11/2017 11:58:00 AM Rating: 5