Kidny

Kidny

இலங்கைக்கு அண்மையில் எந்த ரோஹிங்கிய முஸ்லிமும் வரவில்லை.. ஏற்கனவே வந்தவர்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கி நிலைமை சீரானதும் அனுப்பி வைப்போம்.


வன்முறைகளால் பாரிய இடப்பெயர்வுகளை சந்தித்திருக்கும் மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்திருப்பதாக எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லையென வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.


பெரும் எண்ணிக்கையான ரோஹிங்கிய முஸ்லிம்கள் இலங்கைக்கு தப்பி வந்திருப்பதாக வெளியான செய்தியை மறுக்கும்
வகையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

"அவ்வாறு மியன்மாரிலிருந்து அகதிகள் இலங்கைக்கு வந்திருந்தாலும் 20 அல்லது 25 பேரே வந்திருப்பர். இவர்கள் ஐ.நா அகதிகள் முகவர் நிலையத்தின் ஊடாக பதிவு செய் யப்படுவர்.

மனிதாபிமான அடிப்ப டையில் அவர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு மற்றும் சுகாதார வசதிகளை அவர்களுக்கு வழங்குவோம். அவர்கள் மீண்டும் மியன்மாருக்கு திருப்பி அனுப்பப்டுவார்கள் அல்லது நிலைமை சீரானதும் ஏனைய நாட்டுக்கு அனுப்பிவைக்கப் படுவர்.

அவர்களை நீண்ட நாட்கள் நாம் தங்கவைத்திருக்கப் போவ தில்லை" என்றார். அதேநேரம், ரோஹிங்கிய பிரச்சினை காரணமாக மியன்மாரிலிருந்து அகதிகள் இலங்கை வந்திருப் பதாக முன்வைக்கப்படும் ஊடகக் கருத்துக்களைகுடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என். ரணசிங்கவும் மறுத்துள்ளார்.

"அவ்வாறான கருத்துக்களில் உண்மை இல்லை. ஒன்லைன் மூலம் விசாவுக்கு விண்ணப்பித்து அல்லது மியன்மாரிலுள்ள தூதரகத்தில் விண்ணப்பித்து விசா பெற்றே இலங்கை வரமுடியும்" என்றார்.


ஏப்ரல் மாதத்தின் பின்னர் மியன்மாரிலிருந்து எவரும் நாட்டுக்குள் வரவில்லையென அவர் குறிப்பிட் டார்.


பருத்தித்திறை கடற் கரையில் 32 மியன்மார் அகதிகள் கரைசேர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களைக் கண் டித்து வெள’ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் பல்வேறு போ ராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டிருந்தன. கொழும்பிலுள்ள மியன்மார் தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் நேற்றைய தினம் ரோஹிங்கியா விவகாரத்தில் தலை யிடுமாறு வலியுறுத்தி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் போராட்டமொன்று நடத் தப்பட்டு, மகஜர் ஒன்றும் கையளிக் கப்பட்டது.

இதேநேரம், ரோஹிங்கியா அகதிகளை இலங்கைக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மியன்மார் அரசுக்கு ஆதரவாகவும்  கடந்த வெளளிக்கிழமை மற்றும் நேற்று சில  சிங்கள அமைப்புக்கள் சில ஆர்ப் பாட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு அண்மையில் எந்த ரோஹிங்கிய முஸ்லிமும் வரவில்லை.. ஏற்கனவே வந்தவர்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கி நிலைமை சீரானதும் அனுப்பி வைப்போம். இலங்கைக்கு அண்மையில் எந்த ரோஹிங்கிய முஸ்லிமும் வரவில்லை.. ஏற்கனவே வந்தவர்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கி நிலைமை சீரானதும் அனுப்பி வைப்போம். Reviewed by Madawala News on 9/18/2017 10:36:00 AM Rating: 5