Kidny

Kidny

வெள்ளவத்தை பகுதியில் பெண்களை குறிவைத்துள்ள கொள்ளையர்கள்... (இரு தினங்களுக்கு முன்னர் கொள்ளையர்களுக்கு போதாத காலம்)


கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் பெண்களின் கழுத்திலுள்ள தங்கச்சங்கிலியை அறுத்துச்செல்லும் கொள்ளையர்களின் நடமாட்டம் சில தினங்களாக அதிகரித்து வருகின்றது.

பட்டப்பகல் வேளையில் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வரும் இளைஞர்களே விதியில் தனியாகச் செல்லும் பெண்களின் தங்கச் சங்கிலியை அபகரித்துச் செல்கின்றனர்.

இவ்விதமான தங்கச் சங்கிலி அபகரிப்பு சம்பவமொன்று நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில் வெள்ளவத்தை அருத்துஷா வீதியில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் ஆசிரியை ஒருவர் அவ்விதி யில் நடந்துசென்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணின் கழுத்தில் கடந்த சங்கிலியை அறுத்துள்ளார். அச்சமயம் பின்னால் இருந்து வந்த மோட்டார் சைக்கிளொன்று அவ்விடத்தில் நின்றதும் வாலிபர்மோட்டார் சைக்கிளின் பின்னால் ஏறிக்கொண் டார். மோட்டார் சைக்கிளில் இருவரும் மின்னல் வேகத்தில் விரைந்தனர்.


ஆனாலும் அவ்விரு கொள்ளையர்க ளுக்கும் அன்றைய தினம் போதாத காலம். அவர்கள் விரைந்து சென்ற மோட்டார் சைக்கிள் அவ்விதியில் வைத்து கார் ஒன்றுடன் மோதியதை யடுத்து, அவ்விருவரும் மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலேயே கைவிட்டு ஒட்டம்பிடித்தனர்.


இவ்வாறிருக்கையில் தங்கச் சங் கிலியைப் பறிகொடுத்த ஆசிரியை எழுப்பிய கூக்குரலையடுத்து அவ்வி தியின் தொடர்மாடிகளில் வசிக்கும் பலர் கொள்ளையர்களைத் துரத்தத் தொடங்கினர்.


தொடர்மாடி கட்டுமான வேளைக ளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளை ஞர்களும் கொள்ளையர்களைத் துரத்தினர். இரு திருடர்களுமே வசமாக அகப்பட்டனர்.

இருவருமே நேர்த்தியாக உடையணிந்த இளைஞர்களாவர். இருவரும் வெள்ளவத்தை பொலிஸில் உடனடியாகவே ஒப்ப
டைக்கப்பட்டனர்.


அவ்விருவரும் ஹொரணையைச் சேர்ந்தவர்களெனவும், நீண்டகால மாக அவ்விருவரும் இதுபோன்ற கொள்ளைகளில் ஈடுபட்டு வந்திருப் பது தெரியவந்துள்ளதாகவும் வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.


அவர்களிடமிருந்து சில தங்கச் சங் கிலிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவ்விருவரும் வேறு பாரிய கொள்ளைகளுடன் தொடர் புடையவர்களென்ற சந்தேகத்தில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இது இவ்விதமிருக்க சமீபத்தில் வெள்ளவத்தை ஆஞ்சநேயர் ஆலயத் துக்குச் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் கிடந்த சங்கி லியை ஆட்டோ ஒன்றில் வந்தவர்கள் அபகரித்துச் சென்ற சம்பவம் இடம் பெற்றது. எனினும் அது தங்கச் சங்கிலியல்லவென்று அப்பெண் தெரிவித் தார்.

வெள்ளவத்தை பகுதியில் பெண்களை குறிவைத்துள்ள கொள்ளையர்கள்... (இரு தினங்களுக்கு முன்னர் கொள்ளையர்களுக்கு போதாத காலம்) வெள்ளவத்தை பகுதியில்  பெண்களை குறிவைத்துள்ள கொள்ளையர்கள்... (இரு தினங்களுக்கு முன்னர் கொள்ளையர்களுக்கு போதாத காலம்) Reviewed by Madawala News on 9/19/2017 10:28:00 AM Rating: 5