Ad Space avaiable

காடையர்களால் தொலைத் தொடர்பு கம்பங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டன.


யாழ். குப்பிளான் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் தொலைத் தொடர்பு கம்பங்கள் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. உடைத்து சேதமாக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு கம்பங்கள் வீதியின் குறுக்காக போடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலரும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதேவேளை, அந்த பகுதியூடாக பாடசாலைக்கு சென்ற 10 வயதுடைய மாணவர் ஒருவர் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உரியவர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை என பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்
காடையர்களால் தொலைத் தொடர்பு கம்பங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டன. காடையர்களால்  தொலைத் தொடர்பு கம்பங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டன. Reviewed by Madawala News on 9/26/2017 11:49:00 AM Rating: 5