Kidny

Kidny

இலங்கை அணி சார்பாக புத்தளம் புத்தளம் ஸாஹிரா ஜஹீர் தெரிவு.


பாடசாலை மாணவர்களுக்கிடையிலான 45 வது ஆசிய கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இலங்கை அணி சார்பாக புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மானவன் ஜே.எம். ஜஹீர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டி தொடர் இம்மா தம் 06 ம் திகதி தொடக் கம் 16 ம் திகதி வரைக்கும் ஈரான் நாட்டின் சீராஸ் நகரில் இடம்பெறவுள் ளது.

இலங்கை அணியானது ஈரான், சீனா, மலேசியா மற்றும் இந்திய நாடுக
ளுடன் போட்டியிடவுள்ளது.


இதேவேளை இந்த போட்டி தொடரில் இலங்கை அணிக்கு பயிற்றுவிப்பாளராக புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூ ரியின் உடற்கல்வி போத னாசிரியரும், புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் செயலாளரும், இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளன பொருளாருமான கலாநிதி எஸ். ஆர். எம். ஆஸாத் கலந்து கொள்கிறமையும் குறிப்பி டத்தக்கது.


புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் ஜே.எம். ஜஹீரை வாழ்த்தி புத்தளம் நகரில் பதாதைக ளும் காட்சி படுத்தப்பட் டுள்ளன.

இலங்கை அணி சார்பாக புத்தளம் புத்தளம் ஸாஹிரா ஜஹீர் தெரிவு. இலங்கை அணி சார்பாக  புத்தளம் புத்தளம் ஸாஹிரா ஜஹீர் தெரிவு. Reviewed by Madawala News on 9/11/2017 11:24:00 AM Rating: 5