Ad Space avaiable

பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு தினமும் 100 ரூபா அலவன்ஸ்.


பொருளாதார கஷ்டம், வறுமை உள்ளிட்ட காரணங்களுக்காக பாடசாலை செல்லாத பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க  மாதாந்தம் குறிப்பிட்ட தொகையை அலவன்ஸாக வழங்குவதற்கு கல்வி அமைச்சு 2018 வரவு செலவுத் திட்டத்தில் யோசனை தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டிலிருந்து ஒரு நாளைக்கு இவ்வாறு 100 ரூபா வழங்கப்படுமென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித் துள்ளார்.

மாதாந்த அடிப்படையில் மான வர்களுக்கு இந்த அலவன்ஸ் வழங் கப்படவுள்ளது.

இந்த அலவன்ஸை மாணவருக்கு வழங்குவதா? அல்லது பாடசாலை யின் பிரதிநிதி ஒருவருக்கு வழங்கு வதா? என தற்போது பேச்சுவார்த் தைகள் நடைபெறுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இவ்வாறு பாடசாலை செல்லாத மாணவர்கள் பற்றிய நாடு தழுவிய ரீதியிலான கணக்கெடுப்பும் மேற் கொள்ளப்படும். பாடசாலை அதிபர் கள் ஊடாக இந்த விபரங்கள் திரட் டப்படவுள்ளது.

அடுத்த ஆண்டிலிருந்து இதனை அமுலாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தாகவும் அமைச்சர் தொடர்ந்து கூறியுள்ளார்.

பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு தினமும் 100 ரூபா அலவன்ஸ். பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு தினமும் 100 ரூபா அலவன்ஸ். Reviewed by Madawala News on 10/09/2017 09:22:00 AM Rating: 5