Kidny

Kidny

1044 பேர் கொல்லப்பட்ட கோத்ரா கலவரம்.. மோடிக்கு சம்பந்தமில்லை என மனு தள்ளுபடி செய்யபட்டது.


குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி கோத்ரா ரெயில் நிலையத்தில் நின்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் 58 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பயங்கர கலவரம் வெடித்தது.

இந்த கலவரங்களில் சுமார் 1044 பேர் உயிரிழந்தனர். மேலும் 2500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த கலவரத்தின்போது கொலை, கொள்ளை, கற்பழிப்பு என பல அசாம்பாவித சம்பவங்கள் நடைபெற்றன. இது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு விசாரித்தது.

இந்த கலவர வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், கோத்ரா கலவரத்தில் பெரும் சதி இருந்ததாகவும், அதன் பின்னணியில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கு பங்கு உள்ளது எனவும் சாகியா ஜாப்ரி என்பவர் குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, கோத்ரா கலவரத்தில் பெரும் சதி ஏதும் இல்லை என கூறி மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
1044 பேர் கொல்லப்பட்ட கோத்ரா கலவரம்.. மோடிக்கு சம்பந்தமில்லை என மனு தள்ளுபடி செய்யபட்டது.  1044 பேர் கொல்லப்பட்ட  கோத்ரா கலவரம்.. மோடிக்கு சம்பந்தமில்லை என  மனு தள்ளுபடி செய்யபட்டது. Reviewed by Madawala News on 10/06/2017 08:59:00 AM Rating: 5