Kidny

Kidny

எயார் அரேபியா விமானத்தில் மோதிய மயில். விமானியின் சாதுர்யத்தால் 107 பயணிகளுடன் பத்திரமாக தரை இறக்கம்.


ஏர் அரேபியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா நகரில் இருந்து 107 பயணிகளுடன்
அதிகாலை 4 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தை ஓடுபாதையில் தரையிறக்க விமானி முயன்றார்.

அப்போது திடீரென விமானத்தின் இடது பக்க இறக்கை அருகே மயில் ஒன்று மோதியது. இதில் அப்பகுதியில் ஓட்டை விழுந்து விமானம் சேதமடைந்தது. இதனால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் விமானியின் சாதுர்யத்தால் விமானம் அங்கே பத்திரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த 107 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விமானத்தின் சேதமடைந்த பகுதியை சரி செய்யும் பணி தாமதம் ஆனது. எனவே 4.40 மணிக்கு சார்ஜாவுக்கு மீண்டும் புறப்பட வேண்டிய அந்த விமானத்தின் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் செல்ல இருந்த 163 பயணிகள், ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘மயில் மோதியதால் ஏர் அரேபியா விமானம் பலத்த சேதம் அடைந்து பறக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே மாற்று விமானம் மூலம் சார்ஜாவுக்கு பயணிகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றனர்.

கோவையிலிருந்து சார்ஜா செல்ல காத்திருந்த பயணிகளில் பலர் மக்கா நகருக்கு உம்ரா பயணம் செல்ல இருந்தவர்கள் ஆவர். இந்த விமானம் ரத்து செய்யப்பட்டதால் முதியவர்கள், குழந்தைகள் என பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளானார்கள். அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது மற்றும் பயண தாமதம் குறித்து காலை 9 மணி வரை அதிகாரிகள் தங்களுக்கு தெரிவிக்கவில்லை எனவும், காலை உணவு தாமதமாக வழங்கப்பட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

பழுதடைந்த விமானத்தை சென்னையில் இருந்து தொழில்நுட்ப ஊழியர்கள் சென்று சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பயணிகளை மாற்று விமானத்தில் சார்ஜாவுக்கு அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது..
எயார் அரேபியா விமானத்தில் மோதிய மயில். விமானியின் சாதுர்யத்தால் 107 பயணிகளுடன் பத்திரமாக தரை இறக்கம். எயார் அரேபியா விமானத்தில் மோதிய மயில். விமானியின் சாதுர்யத்தால் 107 பயணிகளுடன் பத்திரமாக தரை இறக்கம். Reviewed by Madawala News on 10/30/2017 02:03:00 PM Rating: 5