Kidny

Kidny

18 சிறுமிகள் துஷ்பிரயோகிக்கப்பட்ட சம்பவம் மீதான விசாரணையில் பொலிசார் கடமை தவறியுள்ளனர்.


~ ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு  (AHRC)

இல. 39/7A, பீரிஸ் மாவத்தை, களுபோவில, தெஹிவளையில் அமைந்துள்ள ‘தாருன் நுஸ்ராஅநாதை
இல்லத்தில் 18 சிறுமிகள்  அங்கு பணிபுரிந்த 62 வயதான ஆண் ஊழியர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு  உள்ளான சம்பவம்  மீதான விசாரணைகளை இலங்கைப் பொலிஸார் மந்தகதியில் மேற்கொண்டு  வருவது தொடர்பில் தமக்கு  அறியக்கிடைத்துள்ளதாக  ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விசாரணைகளை உரிய முறையில் வினைத்திறனாக மேற்கொள்ளாது சந்தேக நபரை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவைக்கும் முயற்சியில்  ஈடுபட்டு  பொலிசார் தமது கடமையில் தவறியுள்ளமை  பற்றி  தமக்கு மேலும்  அறியக்கிடைத்துள்ளதாக  AHRC தெரிவித்துள்ளது

இது தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக  சம்பந்தப்பட்ட  நிறுவனங்களுக்கு உடனடியாக அவசர முறையீடு செய்யுமாறு AHRC மக்களிடம் வேண்டிக் கொண்டுள்ளது

http://www.humanrights.asia/news/urgent-appeals/AHRC-UAC-144-2017   என்ற இணையதள முகவரிக்கு சென்று அங்கு தயார் நிலையில் இருக்கும் மனுவை  எவரும் தம் சார்பாக சமர்ப்பிக்கலாம். (மேற்குறித்த லிங்க் Desktop கணணிகளிலேயே தொழிற்படுகிறது )

சமர்ப்பிக்கப்படும் மனுக்கள்,

1. திரு. பூஜித ஜயசுந்தர 
    பொலிஸ்மா அதிபர் 

2. திரு. ஜயந்த ஜயசூரிய 
    சட்டமா அதிபர் 

3. திரு. ஆரியதாஸ குரே 
    செயலாளர் - தேசிய பொலிஸ் ஆணைக்குழு 

ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும் .

இது  தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தின் (OHCHR) பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பிலான  விசேட அறிக்கையாளருக்கும் (Dr Dubravka Šimonovic) .நாவின் சிறுவர் உரிமைகள் குழுவின் தலைவருக்கும் பிரத்தியேக  கடிதமொன்றை ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
18 சிறுமிகள் துஷ்பிரயோகிக்கப்பட்ட சம்பவம் மீதான விசாரணையில் பொலிசார் கடமை தவறியுள்ளனர். 18 சிறுமிகள் துஷ்பிரயோகிக்கப்பட்ட  சம்பவம்  மீதான விசாரணையில் பொலிசார் கடமை தவறியுள்ளனர். Reviewed by Madawala News on 10/06/2017 10:52:00 AM Rating: 5