Kidny

Kidny

வியாபாரம் செய்ய வந்த இளைஞன் முகம்மத் அஸ்ஜத் (18) ஜனாஸாவாக மீட்பு.



தலவாக்கலைக்கு வியாபாரம் செய்ய வந்த இளைஞன் கொத்தமலை நீர்தேக்கத்திலிருந்து இன்று (21)
ஜனாஸாவாக மீட்கப்பட்டதாக, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர் .
தீபாவளியை முன்னிட்டு புத்தளத்தில் இருந்து தலவாக்கலைக்கு வியாபாரம் செய்ய வந்த புத்தளம் கந்த குடா பகுதியை சேர்ந்த 18 வயதுடைய முகமது நிலாமுதீன் முகம்மது அஸ்ஜத்  என்பவரே இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
இவர் கடந்த 10ஆம் திகதி தலவாக்கலை சென்று, நகரசபை கடையொன்றினை வாடகை அடிப்படையில் பெற்று ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் வியாபரம் செய்துள்ளார்.
குறித்த இளைஞன் கடந்த 17ஆம் திகதி இரவு 7 மணிக்கு கடையிலிருந்து சென்றவர், காணாமற்போயுள்ளார் என தலவாக்கலை பொலிஸ் திலையத்தில் முறைப்பாடு செய்யப்பட நிலையில், இன்று கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
வியாபாரம் செய்ய வந்த இளைஞன் முகம்மத் அஸ்ஜத் (18) ஜனாஸாவாக மீட்பு. வியாபாரம் செய்ய வந்த இளைஞன் முகம்மத் அஸ்ஜத் (18) ஜனாஸாவாக மீட்பு. Reviewed by Madawala News on 10/21/2017 02:56:00 PM Rating: 5