Kidny

Kidny

1990 அவசர அம்பியூலன்ஸ், பிரேக் கோளாரில் நோயாளியுடன் பள்ளத்தில் பாய்ந்தது.

வைத்தியசாலைக்கு அருகில், இன்று (17) அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  

தெனியாய - இயலகம பிரதேசத்தில் இருந்து தெனியாய வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை ஏற்றிச்சென்ற 1990 அவசர அம்பியூலன்ஸ் வண்டி, பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பாதையை விட்டு வில்க பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  

இச்சம்பவத்தின் போது, அம்பியூலன்ஸ் வண்டியில் சென்ற 85 வயதுடைய ஆண் நோயாளி ஒருவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியதோடு, அதில் சென்ற சாரதியும் தாதியும் பாதிப்பின்றி தப்பியுள்ளனர்.  

இந்த அம்பியூலன்ஸ் வண்டி சிறிதேனும் அசைந்து இருந்தால் இந்நிலை மாறுபட்டிருக்கும் என, தெனியாய பொலிஸார் தெரிவித்தனர்.  

தெனியாய பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து, விபத்துக்குள்ளான அம்பியூலன்ஸ் வண்டியை இழுத்து பாதைக்கு கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.   
1990 அவசர அம்பியூலன்ஸ், பிரேக் கோளாரில் நோயாளியுடன் பள்ளத்தில் பாய்ந்தது. 1990 அவசர அம்பியூலன்ஸ், பிரேக் கோளாரில் நோயாளியுடன் பள்ளத்தில் பாய்ந்தது. Reviewed by Madawala News on 10/17/2017 08:58:00 PM Rating: 5