Kidny

Kidny

200 பெண் பணியாளர்கள் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி.


ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் கடமையிலிருந்த பெண் பணியாளர்கள் சுமார் 200 பேர் வரை திடீரென மயக்கமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 9.45 .மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையிலேயெ இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆடைத்தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமையினால் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என நோர்வுட் பொலிஸார் தெரிவித்ததுடன், மேலதிக விசாரணை தொடர்வதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
200 பெண் பணியாளர்கள் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி. 200  பெண் பணியாளர்கள் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி. Reviewed by Madawala News on 10/04/2017 11:06:00 AM Rating: 5