Kidny

Kidny

நிர்வாகத்தின் அசமந்தப்போக்கு வாய்ப்புகளை இழந்துவரும் முஸ்லிம் மகளிர் கல்லூரி ..




தற்போது நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் நிலவிவரும் ஆசியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு நாடு முழுவதும் 2000 ஆசிரிய நியமணங்களை வழங்க  கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.


இதனடிப்படையில் நாடுமுழுவதிலும் உள்ள  ஆசிரியர் கல்விக் கல்லூரிகளில் பயிற்றப்பட்ட ஆசிரிய ஆசிரியைகளை பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை பொறுத்து அப்பாடசாலைகளில்  நியமிக்க அமைச்சு முடிவு செய்துள்ளது


இதற்கமைய நாடு பூராகவும் உள்ள மாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் இயங்கும்  பாடசாலைகள் கல்வி அமைச்சின்  அதிகாரத்தின் கீழ் இயங்கும் தேசிய பாடசாலைகள் ஆகியவற்றில் இருந்தும் ஆசிரிய வெற்றிடங்களை அவ்வப்பிரதேச வலய கல்விக் காரியாலயங்கலாலும்,தேசியபாடசாலைகளில் இருந்தும் கல்வி அமைச்சு கோரி இருந்தந்து.


இதற்கமைய அப்பிரதேசங்களில் இருந்து அனுப்பப்பட்ட நிரல்களுக்கு அமைவாக ஆசிரிய ஆசிரியைகளை பகிந்தளிக்கும் நடவடிக்கையும் கடந்த 10 ஆம் திகதியுடன் தேசிய பாடசாலைகளின் ஆசிரிய பங்கீடும் நிறைவு பெற்றுள்ள அதேவேளை இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதியினால் வைபவரீதியாக கையளிக்கப்படவுள்ளன.


பாடசாலைக்கு ஆசிரியைகளை பெற்றுக்

கொள்வதில் கடும் கஷ்டமாக காணப்படும் இக்காலகட்டத்தில்,கடும் ஆசிரிய பற்றாக்குறை காணப்படும் M L C யில் இருந்து இதற்காக, பற்றாக்குறையாக  இருக்கும் இடங்களுக்கு  ஆசிரியைகளை பெற்றுக்கொள்ள எதுவித முயற்சியும் மேற்கொள்ளாதது மிகவும் கவலைக்குரியதாகும்.


இணைக்கப்பட்டுள் பட்டியலில்  Muslim Ladies College உள்ளடக்கப்படவில்லை.


இது சம்பந்தமாக அரசியல் பிரமுகர் ஒருவரிடம் நாம் வருத்தம் தெரிவித்தபோது ,இது சம்பந்தமாக தான் அதிபருக்கு கூறியபோது ஆசிரிய  பற்றாக்குறைய அனைத்தையும் கல்வி அமைச்சில் கையளிக்கக் கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.அனால் கடைசிவரை கையளிக்கப்படவில்லை. இதனால் ஆசிரிய பற்றாக்குறை பட்டியலில் Mslim Ladies இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.


மேலும் புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியைகளுக்கு பத்து விருப்புப் பாடசாலைகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் இதில் Muslim Ladies College இடம்பெற்றிருக்கவுமில்லை.


சில சகோதரர்களின் வேண்டுகோளுக்கு இனங்க சில  சகோதரிகள் தன் சுய விருப்பத்தின் அடிப்படையில் Musli Ladies College கேட்டும் அது பற்றாக்குறை பட்டியலில் இடம் பெறாத காரணத்தினால் அதுவும் முடியவில்லை.


கடும் ஆசிரிய பற்றாக்குறைய  நிலவும் MLC க்கு இவ் அறியவாய்யு கை நழுவி போனமைக்கு  இருந்த  அதிபரும் STC உறுப்பினர்களுமே இதற்கு பதில் சொல்ல வேண்டும்


இதிலும் மிக முக்கியமான ஒரு விடயம் Muslim Ladies College இல் ஆசியர் இல்லாமல் கஷ்டப்படும் இதேவேளை ஏனைய பாடசாலைக்கு அவ் அப் பாடசாவைகளின்அதிபர்கள் மேற்கொண்ட கடும் முயற்சியால் மேலதிகமாகவும் ஆசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


-அபு இஸ்மத் -




நிர்வாகத்தின் அசமந்தப்போக்கு வாய்ப்புகளை இழந்துவரும் முஸ்லிம் மகளிர் கல்லூரி ..  நிர்வாகத்தின் அசமந்தப்போக்கு  வாய்ப்புகளை இழந்துவரும் முஸ்லிம் மகளிர் கல்லூரி .. Reviewed by Madawala News on 10/16/2017 04:13:00 PM Rating: 5