Kidny

Kidny

உலக பௌத்த உச்சி மாநாடு அடுத்த வாரம் இலங்கையில் ..


ஏழாவது உலக பெளத்த உச்சி மாநாடு - 2017 நவம்பர் 2 முதல் 7 ஆம் திகதி வரை இலங்கையில்
நடைபெறவுள்ளது.

கொழும்பில் உள்ள அலறி மாளிகையில்  நடைபெறவிருக்கும் இந்த உச்சி மாநாட்டில்  47 நாடுகளில் இருந்து சுமார் 300 சங்கம் நாயகர்கள், மற்றும் துறவிகள்  பங்குபற்றவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில்  நவம்பர் 2 ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டின் 3 ஆம் திகதி மற்றும் நவம்பர் 4 ஆம் திகதி முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இறுதி நாள் நிகழ்வு நவம்பர் 5 ம் தேதி நடைபெறும் அதேவேளை அநுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய இரு நகராங்களை நோக்கி  நவம்பர் 6, மற்றும் 7 ஆம் திகதிகளில் இரண்டு ஆய்வுப் பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உலக பௌத்த உச்சி மாநாடு அடுத்த வாரம் இலங்கையில் ..  உலக பௌத்த உச்சி மாநாடு அடுத்த வாரம் இலங்கையில் .. Reviewed by Madawala News on 10/27/2017 10:14:00 PM Rating: 5