Kidny

Kidny

கண்டி,மடவளை ஹில்கன்ட்றி சர்வதேச பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வுகள் - 2017




கண்டி ,மடவளை ஹில்கன்ட்றி சர்வதேச பாடசாலையில் சிறுவர் தினத்தினை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. பாடசாலையின் முன்பள்ளி மாணவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (29/09/17) கண்டி சிறுவர் பூங்காவிலும் தரம் 1, 2 மாணவர்கள் பேராதனை பூங்காவிலும் சிறுவர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.


மேலும் பிறருக்கு உதவுவோம் என்ற தொனிப்பொருளில் “Friendship” (உதவும் கரங்கள்) என்ற நிகழ்ச்சி  3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலை  வளாகத்தில் கல்லூரி அதிபர் ஜனாப் A.A.M.Jazil தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாக திருமதி. H.K.விஜேரட்ன (வலையக் கல்விப் பணிப்பாளர் -வத்தேகம) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.


இவ்விழாவில் விசேட அம்சமாக விளங்குவது, மெனிக்கின்ன லியன்கஸ்வகுர சிங்கள வித்தியாலய மாணவர்களை வரவழைத்து அவர்களிற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி சிறப்பித்தமை ஆகும்.இன,மத பேதமின்றி அனைவரும் இலங்கையர் என்ற கருத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி அமைதிருந்தது.


இந்நிகழ்ச்சியின் குறிக்கோள்:
இனங்களிடையே ஒற்றுமையை வெளிப்படுத்தல்
கலை ,நிகழ்ச்சிகளை பரிமாற்றிக்கொள்ளல்
அரச பாடசாலைகளிற்கும் தனியார் பாடசாலைகளிற்குமிடையிலான உறவை மேம்படுத்தல்.

இதில் உரையாற்றிய கல்விப் பணிப்பாளர் திருமதி. H.K.விஜேரட்ன மற்றும் பாடசாலை அதிபர் திரு.ஹேரத் ஆகியோர் சமகாலத்தில் இப்படியொரு நிகழ்ச்சி எங்கும் நடந்ததாக தான் அறிந்ததில்லை என்று கூறியதோடு இந்நிகழ்ச்சி இனங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் என்பதையும் கூறினார்.

Media Unit
HIS
கண்டி,மடவளை ஹில்கன்ட்றி சர்வதேச பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வுகள் - 2017 கண்டி,மடவளை ஹில்கன்ட்றி சர்வதேச பாடசாலையின் சிறுவர் தின  நிகழ்வுகள் - 2017 Reviewed by Madawala News on 10/09/2017 10:16:00 PM Rating: 5