Kidny

Kidny

கொழும்பு மாநகர சபை மேயர் பதவிக்கு சாலி ரோஸி இடையே மோதல் ..


எதிர்வரும் 2018 ஜனவரி மாதம் 27 ம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் கொழும்பு மாநாகர சபை மேயர் வேட்பாளராக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஷி சேனாநாயக்க களமிறக்கப்படுவார் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதே நேரம் சுதந்திர கட்சி மேயர் வேட்பாளராக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி களமிறக்கப்படலாம் என கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


எதிர்வரும் புதன்கிழமை உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான வர்த்தமானி வெளியாகும் என அமைச்சர் பைஸர் முஸ்தபா அறிவித்துள்ள போதும்  சு வட்டாரங்களின் தேர்தல் ஆயத்தங்கள் மந்த கதியில் நடைபெறுவதாகவும் அதனால் தேர்தல் மார்ச் வரையாவது தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கொழும்பு மாநகர சபை மேயர் பதவிக்கு சாலி ரோஸி இடையே மோதல் ..  கொழும்பு மாநகர சபை மேயர் பதவிக்கு சாலி ரோஸி இடையே மோதல் .. Reviewed by Madawala News on 10/29/2017 02:52:00 PM Rating: 5