Ad Space avaiable

நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2018 பட்ஜெட் ஒதுக்கீட்டுச்சட்டமூலம். முழு விபரம் இதோ.


2018 ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்சட்டமூலம் நேற்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் பாதுகாப்பு, சுகாதாரம், உயர்கல்வி, மாகாண சபைகள், சக வாழ்வு மற்றும் தேசிய மொழிகள் அமைச்சுக்கள் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு, கல்வி, மீள்குடியேற்ற அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன.

2018ஆம் ஆண்டின் மொத்த செலவினமாக 3இலட்சத்து 98ஆயிரத்து 286 கோடியே 78 இலட்சத்து 18 ஆயிரம் (398,236,78,18,OOO) ரூபாவென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், இது 2017 ஆம் ஆண் டிலான அரசின் செலவினத்திலும் பார்க்க 35 ஆயிரத்து 425 கோடி ரூபா அதிகமாகும்.

 இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தை பதில் நிதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன நேற்று(09) சபையில் சமர்ப்பித்தார். முதலாம் வாசிப்புக்காக அவர் இதனை சமர்ப்பித்திருந்தார்.

இதில் 2018 ஆம் நிதியாண்டுக்கான அரசின் செலவின மதிப்பீடுகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய அடுத்த வருடத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிக பட்சமாக
29 ஆயிரம் கோடி ஒதுக்கபட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கான செலவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 2017 ஆண்டுக்கான மொத்த செலவினம் 3 இலட்சத்தி, 62 ஆயிரத்தி, 811 கோடியே 4 இலட்சத்தி 36 ஆயிரம்.

( 362,811,04,36000) ரூபாவாக இருந்த நிலையில், 2018 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவினமானது அதிலும் பார்க்க 35 ஆயிரத்து 425 கோடியே 73 இலட்சத்து 82 ஆயிரம் (35,425,73,82,000 ரூபாவினால் அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சுக்கு கடந்த வருடம் 160,971,829,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்தபோதும், 2018ஆம் ஆண்டுக்கு 178,899,998,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சுக்கு 2017ஆம் ஆண்டில் 160,971,829,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2018ஆம் ஆண்டில் 102,880,000,000 ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளன.

நிதி அமைச்சுக்கான ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் 242,806,45,000 ரூபாவாக இருந்த ஒதுக்கீடு 2018ஆம் ஆண்டு 227,572,088,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினமாக 29 ஆயிரத்து 7 கோடியே 13 இலட்சத்தி 75 ஆயிரம் (29,071, 13,75,000) ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன்,  இது 2017 ஆம் ஆண்டு அந்த அமைச்சுக்கென ஒதுக்கப்பட்ட 28 ஆயிரத்து 404 கோடியே 43 இலட் சத்து 44 ஆயிரம் (28,404,43,44,000) ரூபாவிலும் பார்க்க 666 கோடியே 70 இலட்சத்து 31 ஆயிரம் (666,70,31,000 ரூபா அதிகமாகும்.

அதேபோல், ஜனாதிபதிக்கென 2018 ஆம் ஆண்டுக்கான செலவினமாக 998 கோடியே 35 இலட்சத்து 25 ஆயிரம் (998,35,25,000 ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், இது 2017 ஆம் ஆண்டில் இந்த விடயத்துக்கென ஒதுக்கீடு செய்யப் பட்ட 654 கோடியே 26 இலட்சத்து 79 ஆயிரம் (645,25,79,000 ரூபாவிலும் பார்க்க 353 கோடியே 8 இலட்சத்து 46 ஆயிரம் (358,08,46,000)
ரூபா அதிகமாகும்.

இதேநேரம், பிரதமர் அலுவலகத்துக்கான 2018 ஆம் ஆண்
டுக்கான செலவினமாக 77கோடியே 26 இலட்சத்து 80 ஆயிரம் (17726,80,000 ரூபா ஒதுக்கப்பட் டுள்ளது. இது 2017 ஆம் ஆண்டுக்
கான செலவினமாக அந்த அலு வலகத்துக்கு ஒதுக்கப்பட்ட 125 கோடியே 52 இலட்சத்து 7 ஆயிரம் (125,52,71,000 ரூபாவிலும் பார்க்க 51 கோடியே 74 இலட்சத்து 9 ஆயிரம் (51,74,09,000 ரூபா அதி மாகும்.

உயர் கல்வி அமைச்சுக்கு கடந்த வருடம் 182,757,000,000 ரூபாஒதுக் கப்பட்டிருந்தது. 2018ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 163,404,738,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

 மீள்குடியேற்ற அமைச்சுக்கான ஒதுக் கீடும் கடந்த வருடத்துடன் ஒப்பி டுகையில் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த அமைச்சுக்கு 17,441,414,000 ரூபா ஒதுக்கப் பட்டிருந்தது. எனினும், 2018ஆம் ஆண்டில் 11,425,912,000 ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளன.

 கலந்துரையாடல் அமைச்சுக் கான ஒதுக்கீடு இம்முறை அதிக ரிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் 676,598,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந் தநிலையில், 2018ஆம் ஆண்டில்,
2,870,318,000 ரூபா ஒதுக்கப்பட் டுள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூ ராட்சி மன்ற விவகார அமைச்சுக் கான ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள் ளது. இதன்கீழ் வரும் வடமாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப் பட்டுள்ளன.

வடமாகாண சபைக்கு கடந்த வருடம் 22,094,851,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்தபோ தும், இம்முறை 22,474,061,000 ரூபாவும், கிழக்கு மாகாணத்துக்கு 23,332,055,000 ரூபாவும் ஒதுக்கப் பட்டுள்ளது.

இதேவேளை, தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு 2,573,48,30,000 ரூபாவும் நீதி அமைச்சுக்கு 1,114,99,11,.OOO ரூபாவும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு 1,077,85,50,000 ரூபாவும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 21,821,73,79,000 ரூபாவும் மதிப் பீடு செய்யப்பட்டுள்ளன.

நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2018 பட்ஜெட் ஒதுக்கீட்டுச்சட்டமூலம். முழு விபரம் இதோ. நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2018 பட்ஜெட் ஒதுக்கீட்டுச்சட்டமூலம். முழு விபரம் இதோ. Reviewed by Madawala News on 10/10/2017 11:41:00 AM Rating: 5