Kidny

Kidny

2020ஆம் ஆண்டு வரை எந்த தேர்தலும் இடம்பெறாது. அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் இதுதான்.


2020ஆம் ஆண்டு வரை எந்த தேர்தலையும் இந்த அரசாங்கம் நடத்தாது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும்
முன்னெடுக்கப்பட்டு விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மற்றும் மாநகரசபை தேர்தல் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதும், குறித்த தேர்தல் 2020ஆம் அண்டிலேயே நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.

அம்பகமுவ பிரதேசத்திற்கு புதிய பிரதேச சபைகளை நிறுவ வேண்டும் என மனோ கணேசன் வழக்கு தொடர்கின்றார். அவருடைய வழக்கிற்கு பிறகு மற்றுமொருவர் வழக்கு தொடர்வார். இவ்வாறு ஒருவருக்குப்பின் ஒருவராக மூன்று வழக்குகளை தாக்கல் செய்வதற்கு அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 2020 வரை தேர்தல் நடைபெறாது. எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரியில் தேர்தல் நடைபெறாவிட்டால் நாம் அனைவரும் கொழும்பிற்கு படையெடுத்து வந்து, பாரிய போராட்டத்தை நடத்துவோம் எனவும் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு வரை எந்த தேர்தலும் இடம்பெறாது. அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் இதுதான். 2020ஆம் ஆண்டு வரை எந்த தேர்தலும் இடம்பெறாது. அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் இதுதான். Reviewed by Madawala News on 10/19/2017 02:20:00 PM Rating: 5