Kidny

Kidny

20 வருட அரசியலை பின் நோக்கி பார்க்கும் முஸ்லிம் சமுதாயம்



ஜெமீல் அகமட்-

இலங்கை சதந்திரம் அடைந்து ஜனநாயக ஆட்சிக்குள் வந்தாலும் முஸ்லிம் சமுதாயம் அரசியலில் ஒரு பகடைக்காயாகவும் அபிவிருத்தியில் முஸ்லிம் பிரதேசம் பின்னடைவையும் எதிர் கொண்ட போது மர்ஹும் அஸ்ரப் அவர்கள் பெரினவாத ஆட்சியாளர்களோடு போட்டியிட்டு தனது சமுதாயத்தூக்கு நன்மை பெறக்கூடிய அரசியல் செய்ய வேண்டும் என்ற  தூர நோக்கோடு ஆரம்பித்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மக்களின் ஆதரவுடன் வளர்ச்சி கண்டு இலங்கை அரசியலில் ஒரு ஆட்சி நாயகனாக திகழ்ந்த காலத்தில் தலைவர் அஸ்ரப் அவர்கள் தனது சமுதாயத்துக்கு தன்னால் முடிந்த அளவு உதவிகளை செய்து முஸ்லிம் பிரதேசங்களை அபிவிருத்தி செய்து பல புதிய கிராமங்களை உருவாக்கினார் அதிலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய அம்பாறை மாவட்டத்தில் அஸ்ரப் நகர் , ஆலங்குளம் ,சம்புநகர்  மீலாத் நகர் ,என்று பல புதிய கிராமங்களை உருவாக்கி மக்களை மீள்குடியேற்றம் செய்தார் என்பதை நாம் மறக்க முடியாது.


ஆனால் தலைவர் அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு பின் அதாவுல்லாஹ் கூறியது போல் கூட்டு கொலை செய்து கட்சியை பறித்தெடுத்த தற்போதைய தலைவர் அஸ்ரப் அவர்களின் #கொள்கையில் #பயனிக்கின்றாரா ? அல்லது சமுதாயத்துக்கு எதாவது #நன்மையான #காரியம் செய்துள்ளாரா ? என்று பார்த்தால் எதுவுமே இல்லை என்று தான் கூற வேண்டும்


மறைந்த தலைவரின் அரசியல் காலம் குறுகிய காலமாக இருந்தாலும் அவரின் சேவைக்காலம் மக்களால் மறக்க முடியாத நீண்ட ஆயுள் காலமாகவே காணப்படுகின்றன.


தலைவர் அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு பின் கிழக்கு மக்கள் அதிலும் முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையாக இருந்த  அம்பாறை மாவட்ட மக்கள் தற்போதைய தலைவர் ஹக்கிம் அவர்களின் அரசியல் மூலம் சமுதாயத்துக்கு நன்மைகள் கிடைக்கலாம் என எதிர்பார்த்த மக்கள் 17வருடமாக ஏமாற்றம் அடைந்து இன்று முஸ்லிம் காங்கிரஸ் என்ற நாமத்தை உச்சரிக்க வெட்கப்படுகின்றனர் அதனால்தான் இன்று அஸ்ரப் வழியில் அரசியல் செய்யும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் அவர்களை ஆதரித்து தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர் அவர்கள் அமைச்சர் றிசாத் அவர்களின் உடல் நலம்  நீடுழி காலம் வாழ மக்கள் பிராத்தனை செய்கின்றனர்.


அம்பாறை மாவட்டத்தில்  சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரசாங்கத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட அந்த  வீட்டை கூட பெற்றுக் கொடுக்க முடியாத ஹக்கிம் அந்த மக்களுக்கு தனது முயற்சியால் ஒரு வீடாவது கட்டிக் கொடுத்தாரா ? என்று பார்த்தால் அதுவுமில்லை தலைவர் அஸ்ரப் அவர்களின் சேவையில் ஒரு தூளி கூட பெறுமதியான சேவையை ஹக்கிமால்  செய்ய முடியாமல் அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்றி வருவதை அறிந்த மக்கள் அவரை இனி ஏமாற்ற அமைச்சர் றிசாத் அவர்களுக்கு ஆதாரவு தெரிவித்து வருகின்றனர்.


இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் எதிர் நோக்கின்ற  வீடு குடிநீர் காணி பிரச்சினைகளை மக்கள்  அமைச்சர் றிசாத் அவர்களிடம் எடுத்து கூறிய போதும் அவற்றுக்கு தீர்வுகான முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்த கிழக்கு மாகாண அரசியல் அதிகாரம் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு சிறு தடைகளை ஏற்படுத்தி இருந்தது ஆனால்  தற்போது கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு கிழக்கு  அபிவிருத்திக்கு தடையாக இருந்தவர்கள் வீதியில் நிற்கின்றனர் அதனால் இனிமேல் கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க அமைச்சர் றிசாத் தூரித நடவடிக்கை எடுத்து வருகிறார் அதனால் அமைச்சர் றிசாத் அவர்களின் அபிவிருத்தி மழை கிழக்கில் பொழிந்து கொண்டு வருகின்றது


கடந்த தேர்தலில் அமைச்சர் றிசாத் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய பொத்துவில் மண்ணில் 50 வீட்டுதிட்டத்துக்கான அடிக்கல் (07/10/2017) வைத்து வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது இந்த 50 வீடுகள் கொண்ட கிராம் சகல வசதிகளும் கொண்ட மாதிரிக் கிரமமாக அமையவுள்ளது இதனால் அருகில் உள்ள ஜெயக்கா கிராம மக்களுக்கு பாரிய நன்மை ஏற்படும் சூழ்நிலை காணப்படுகின்றது


மற்றது பொத்துவில் பிரதேசத்தில் இன்று மக்கள் எதிர் நோக்கும் குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைப்பதற்கும் நான்காம்  வட்டாரா பள்ளிவாசல் புனர்நிர்மான வேலைகளுக்கான நிதியுதவியையும் அமைச்சர் றிசாத் அவர்கள்  உடனே கையளித்தார் அத்தோடு குடிநீர் பிரச்சினையை உடனே தீர்த்து வைக்குமாறு உத்தவிட்டார்.


மேலும் இது போன்ற பல கிராமங்கள் எதிர்வரும் காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் உருவாக்கப்படவுள்ளது அதுபோல்  நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் அமைச்சர் றிசாத் அவர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியால் எதிர் வரும் மாதம் சுனாமியால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு பகீர்ந்து கொடுக்கப்படவுள்ளது இதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு  ஜனாதிபதியும் உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அத்தோடு பொத்துவில் பிரதேசத்தில் நீண்ட காலமாக இருந்து வரும் #தாராம்பளை #வட்டமடு போன்ற கானி பிரச்சினைகளுக்கு ஆனைக்குழு மூலம் நிரந்தர தீர்வை அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுக்க அமைச்சர் றிசாத் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.


இவைகளை பார்க்கும் போது மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு பிறகு  அம்பாறை மக்களுக்கு அமைச்சர் றிசாத் அவர்களின் அரசியல் பிரவேசம் என்பது இறைவன் கொடுத்த ஒரு வரப்பிரகாசம்  என்று தான் கூற வேண்டும் அதனால்தான் இன்று அம்பாறை மாவட்ட மக்கள் அமைச்சர் றிசாத் அவர்களின் அரசியல் கரத்தை பலப்படுத்த முன் வந்துள்ளனர்.


தலைவர் அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு பின் ஹக்கிம் கிழக்கில் ஒரு வீடு கட்டிய இடத்தை கூட அடையாளம் காட்ட முடியாத மக்களாக நாம் ஏமாற்றம் அடைந்து வாழ்கின்றோம்.


முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரையும் ஆதவன் என்ற பாடலை வைத்துக் கொண்டு நாடகம் ஆடுகின்ற ஹக்கிம் நடன குழு  சிறு வீதிகளையும் வளராத அடிக்கல்லை நாட்டி  ஆராவாரம் செய்து கொண்டு மக்களுக்கு பிரயோசனம் இல்லாத அபிவிருத்தி விழா கொண்டாடுவதை நினைத்து மக்கள் சந்திக்கு சந்தி சிரிக்கின்றனர்.


கடந்த காலங்களில் அமைச்சர் றிசாத் அவர்களை விமர்சனம் செய்தவர்கள் பொத்துவில் 50 வீட்டுத்திட்டத்தை புகழ்ந்து பேசுகின்றனர் அதுமட்டுமல்ல மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் அரசியல் காலத்தை மக்கள்  நினைவுகின்றனர் இதனால்  பொண்னான  காலம் மலர்ந்து விட்டது என்று தான் கூற வேண்டும்


மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் அரசியல் கால அபிவிருத்தியை அமைச்சர் றிசாத் அவர்களின் அரசியலால் கிழக்கு மக்கள் இன்னு காணக்கூடியதாக இருக்கின்றது  அத்தோடு இந்த 50 வீடுகளால் பொத்துவில் பிரதேசத்தில் வீடின்றி வாழும் ஏழை மக்களின் வாழ்வில் ஒரு திறுப்புமுனை ஏற்பட்டு அவர்களின் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்படும் இப்படி மக்களுக்காக சமுதாயத்துக்காக அரசியல் செய்யும் அமைச்சர் றிசாத் அவர்களை பொத்துவில் மக்கள் வாழ்க்கையில் மறக்கமாட்டார்கள் என்பது உறுதி.


மறைந்த தலைவர் நேசித்த மண் அம்பாறை மாவட்ட மண் அந்த மக்கள் தலைவருக்காக உயிரை கூட தியாகம் செய்தவர்கள் இன்று தலைவரின் கொள்கையில்லாத கட்சியை வெறுத்து தலைவரின் கொள்கையில் அரசியல் செய்யும் அமைச்சர் றிசாத் அவர்களின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை அஸ்ரப் அவர்களின் உண்மையான வீசுவாசிகள் ஆதரிக்கின்றனர் அதனால் ஆமை வேகத்தில்  மயில்  பயனித்தாலும் அதன் சேவைகள் மக்கள் நலன் கொண்டவையாக இருப்பதால் எதிர்வரும் தேர்தலில் குதிரை வேகத்தில் மக்கள் ஆதரவுடன் மயில் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

20 வருட அரசியலை பின் நோக்கி பார்க்கும் முஸ்லிம் சமுதாயம் 20 வருட அரசியலை பின் நோக்கி பார்க்கும் முஸ்லிம் சமுதாயம் Reviewed by Madawala News on 10/08/2017 01:28:00 PM Rating: 5