Kidny

Kidny

நேற்று இடம்பெற்ற பொதுபல - முஸ்லிம் தரப்பு பேச்சுவார்த்தை அப்டேட்..


முஸ்லிம் தரப்புக்கும், பொதுபல சேனாக்கும் நேற்று திங்கட்கிழமை (23) கொழும்பில் நடைபெற்ற 4 ஆவது சுற்றுப்
பேச்சுவார்த்தையில்  ஞானசாரர் பங்கேற்கவில்லை.

குறித்த பேச்சில் தன்னால் பங்கேற்க முடியாதென ஏற்கனவே ஞானசாரர் அறிவித்துள்ளார்.எனினும் அடுத்துவரும் பேச்சுக்களில் அவர் பங்கேற்பாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுபல சேனாக்கும்,  முஸ்லிம் தரப்புக்கும் இடையிலான 4 ஆவது சுற்றுப்பேச்சுவார்த்தை நேற்று (23) திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றுள்ளது.

வில்பத்துவில் முஸ்லிம்கள் காணிகளை அழிப்பதாக சிங்கள தரப்பில் மேலோங்கிய நச்சுப் பிரச்சாரம் தொடர்பில், பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் நவ்பள் மிக விரிவான விளக்கமொன்றை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பிலான பேச்சு ஆரம்பமாகியபோது, கடும் வாதப்பிரதி வாதங்கள் நடந்துள்ளன.

நேற்றைய பேச்சில் பொதுபல சேனா தரப்பிலிருந்து, அதிகமானவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தெளிவான மற்றும் ஆதாரமான தகவல்களை முஸ்லிம் தரப்பினர் வில்பத்து  தொடர்பிலும் அதற்கு அருகாமையில் குடியேறியுள்ள மக்கள் தொடர்பிலும் வழங்கினர். இதனால் பொதுபல சேனா தரப்பினர் திருப்தியடைந்துள்ளனர்.

இதையடுத்து பொதுபல சேனா தரப்பிலிருந்து, வில்பத்து பற்றியும், அதற்கு அண்மையில் குடியேறியுள்ள முஸ்லிம்கள் சம்பந்தமாகவும் செய்துவந்த போலி பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது

நேற்று மாலை 7 மணிக்கு ஆரம்பமான இப்பேச்சுவார்தஇதை இரவு 10 மணிவரை நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று இடம்பெற்ற பொதுபல - முஸ்லிம் தரப்பு பேச்சுவார்த்தை அப்டேட்..  நேற்று இடம்பெற்ற பொதுபல - முஸ்லிம் தரப்பு பேச்சுவார்த்தை அப்டேட்.. Reviewed by Madawala News on 10/24/2017 02:40:00 PM Rating: 5