Kidny

Kidny

துப்பாக்கிச் சூட்டில் 27 வயது இளைஞன் படுகாயம்.


-பாறுக் ஷிஹான்-

 யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மணியம்தோட்டம் பகுதியில்   இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டில் இளைஞன்
ஒருவர்  படுகாயமடைந்தார்.

 இன்று(22) மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மன்  இளைஞனே  படுகாயமடைந்துள்ளார்.
 இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 மேலும்   குறித்த இளைஞனின் மார்புப் பகுதியினை துப்பாக்கி  குண்டுகள் துளைத்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்
சம்பவம் தொடர்பாக  பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
துப்பாக்கிச் சூட்டில் 27 வயது இளைஞன் படுகாயம். துப்பாக்கிச் சூட்டில்   27 வயது இளைஞன்   படுகாயம். Reviewed by Madawala News on 10/22/2017 05:36:00 PM Rating: 5