Kidny

Kidny

நெகிழ்ச்சியடைய வைத்த புலைமைப்பரீட்சை சித்தி.. ( பாடசாலையில் மொத்தம் 2 மாணவர்கள். ஆசிரியரே அதிபர்)


இரண்டு மாணவர்கள் மாத்திரமே கல்வி பயிலும் வவுனியா பாடசாலை ஒன்றில் புலைமைப்பரீட்சைக்கு தோற்றிய மாணவன் ஒருவன் 160 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத் திற்குட்பட்ட, பட்டடை பிரித்தகுளம் என்னும் கிராமத்திலே இந்த பாடசாலை அமைந்துள்ளது.

அரசினர் தமிழ் கலவன் பாடசாலையான இதில், கல்வி பயிலும் கங்காதரன் கென்றிக்சன் எனும் மாணவனே புலைமைப்பரீட் சையில் 160 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும், அதிப ருக்கும் பெருமை சேர்த்துள்ளான்.

நெடுங்கேணியிலிருந்து பட்டடை பிரிந்தகுளம் என்ற கிராமம் 12 கிலேமீற்றர் தூரத்திலுள்ளது.

 இக்கிராமம் யுத்த நடவடிக்கைகள் காரணமாக நான்கு தடவைகளுக்கு மேல் அழிந்துள்ளதுடன், இப்பிரதேச மக்கள் பல தடவை இடம்பெயர்ந்தும் சென்றுள்ளனர்.

இறுதியாக 2012 இல் மீள்குடியேற்றம் செய்யப் பட்ட இக்கிராமத்திலுள்ள மக்கள், தங்கள் பிள்ளை களை நகரப் பாடசாலைகளில் சேர்ப்பதையே விரும் பினர்.

இதனால் பின்தங்கிய பாடசாலையாக இது தரம் குறைந்தது. கெ. கென்றிக்சன் மற்றும் யா.ரிபின்சன் ஆகிய இரண்டு மாணவர்களும் அதிபரின் பாதுகாப்புடனேயே பாடசாலைக்கு வந்து செல்கின்றனர்.

இப்பாடசாலையின் அதிபராகவும் ஆசிரியராக வும் பணியாற்றும் செல்லத்துரை செந்தில்நாதன் இது குறித்து தெரிவித்ததாவது: பாடசாலையில் நடைபெறும் எந்த நிகழ்வுகளுக் கும் கிராம மக்கள் ஒத்துழைப்பதில்லை. அனைத்து வேலைகளையும் இவ்விரு மாணவர்களும், நானும் சேர்ந்து செய்கின்றோம்.

இப்பாடசாலையின் பெருமை வெளியுலகுக்கு தெரிய வேண்டும் என்பதை விட இக் கிராமத்திலுள்ள மக்களுக்கு தெரிந்து அவர்கள் தங்கள் பிள்ளைகளை இப்பாடசாலையில் சேர்க்க வேண்டும் .மேலும் அபிவிருத்தியை நோக்கி இப்பாடசாலை பய ணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நெகிழ்ச்சியடைய வைத்த புலைமைப்பரீட்சை சித்தி.. ( பாடசாலையில் மொத்தம் 2 மாணவர்கள். ஆசிரியரே அதிபர்) நெகிழ்ச்சியடைய வைத்த புலைமைப்பரீட்சை சித்தி..  ( பாடசாலையில் மொத்தம் 2 மாணவர்கள். ஆசிரியரே அதிபர்) Reviewed by Madawala News on 10/13/2017 11:29:00 AM Rating: 5