Kidny

Kidny

ஞானசார தேரருடனான முஸ்லிம் சமூக பிரதிநிதிகளின் 3 ஆம் கட்டபேச்சுவார்த்தை நிறைவு. நான்காம் கட்டம் திங்கள்.



பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கும் முஸ்லிம் சமூக பிரதி நிதிகளுக்கும் இடையிலான 3
ஆம் கட்டபேச்சுவார்த்தை
நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் வில்பத்து விவகாரம் மற்றும் மறிச்சுக்கட்டி முஸ்லிம் குடியேற்றம் என்பன முக்கிய கருப்பொருளாக அமைந்திருந்தன.

பொது பலசேனா அமைப்பு கடந்த காலங்களில் வில்பத்து விவகாரத்தை கடுமையாக விமர்சித்ததால் முஸ்லிம் தரப்பு அதுதொடர்பில் விளக்கங்களை வழங்கியது.

வில்பத்து தொடர்பாக மேலதிக விபரங்களை வழங்குவதற்காக சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் பேராசிரியர் நவ்பல் ஆகிய இருவரும் பெயர் குறிப்பிடப்பட்டார்கள் .

வில்பத்துவின் எல்லைகள் முஸ்லிம்களின் சொந்தக் காணிகள்எல்லைகள் மீள் குடியேற்றம் முஸ்லிம்களின் பூர்வீகம் என்பன தொடர்பில் குறிப்பிட்ட இருவரும் ஞானசார தேரருக்கு விளக்கமளிக்கவுள்ளனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் இவ்விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்கள் பற்றியும் பெளத்தர்கள் பற்றியும் பொது பலசேனா பற்றியும் தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனையடுத்து ஞானசார தேரர் சிங்கள சமூக வலைத்தளங்களை இவ்வாறான கருத்துகள் பரப்புவுதிலிருந்தும் தவிர்த்துக் கொள்வதாக தெரிவித்தார்.

முஸ்லிம் தரப்பும் அவ்வாறான நடவடிக்கைகளை தாமும் மேற்கொள்வதாகத் தெரிவித்தது. இருதரப்பு சந்திப்புகளும் சிங்கள முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்துவனவாக அமைய வேண்டுமென இருதரப்பும் இணக்கம் கண்டன.
ஞானசார தேரருடனான முஸ்லிம் சமூக பிரதிநிதிகளின் 3 ஆம் கட்டபேச்சுவார்த்தை நிறைவு. நான்காம் கட்டம் திங்கள். ஞானசார தேரருடனான முஸ்லிம் சமூக பிரதிநிதிகளின்  3 ஆம் கட்டபேச்சுவார்த்தை நிறைவு. நான்காம் கட்டம் திங்கள். Reviewed by Madawala News on 10/21/2017 11:13:00 AM Rating: 5